சென்னை, மார்ச் 2023: இந்தியாவின் முன்னணி ப்ரீ-ஸ்கூல் நெட்வொர்க்கான யூரோகிட்ஸ், 23-24 புதிய கல்வியாண்டில் பல ஷிப்ட்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இந்த அறிமுகத்தின் மூலம், யூரோ கிட்ஸ், தங்கள் குழந்தையின் கல்விக்கு வரும்போது பெற்றோருக்கு அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் விருப்பங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியானது, அவர்களின் முன்பள்ளித் தேவைகளுக்காக காலை அல்லது பிற்பகல் தொகுதிகளை விரும்பும் அனைத்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வசதியையும் பெரிய நிவாரணத்தையும் வழங்குகிறது. இந்த முன்முற்சி US/UK அல்லது ஒழுங்கற்ற பணி ஷிப்ட்களை கொண்ட பெற்றோருக்கும் ஒரு தீர்வை வழங்குகிறது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, யூரோகிட்ஸ் நர்சரி மற்றும் ப்ளே குரூப்பில் உள்ள குழந்தைகளுக்கு, அதிகாலை ஷிப்ட்கள், லேட்-மார்னிங் ஷிப்ட்கள் மற்றும் பிற்பகல் ஷிப்ட்கள் உட்பட மூன்று தொகுதிகளை வழங்குகிறது. யூரோ ஜூனியர் மற்றும் யூரோ சீனியருக்கு, அதிகாலை அல்லது தாமதமான காலை ஷிப்ட் என பெற்றோருக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன.
ஆரம்பக் குழந்தைக் கல்வியானது, குழந்தைகளை அத்தியாவசியமான வாழ்க்கைத் திறன்களைக் கொண்டதாக மாற்றுவதில் முக்கியமானதாயிருக்கிறது. யூரோகிட்ஸ், குழந்தையின் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் முழுமையான வளர்ச்சியை அதன் ‘குழந்தை முதன்மை ‘ கருத்தியலுடன் அனுமதிக்கிற ஒரு கட்டமைக்கப்பட்ட EUNOIA பாடத்திட்டத்தை வழங்குகிறது. யூரோகிட்ஸ் -இல் உள்ள பாடத்திட்டமானது, 21 ஆம்நூற்றாண்டின் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்காக கவனம், நெகிழ்ச்சி மற்றும் இரக்கம் போன்ற கவனமுள்ள நடத்தைகளைப் பயிற்சி செய்ய குழந்தைகளுக்கு உதவுகிறது. யூரோகிட்ஸ் ப்ரீ ஸ்கூல் 0-6 வயதுக்குட்பட்ட ஏராளமான குழந்தைகளுக்கு உயர்தர மற்றும் கட்டமைக்கப்பட்ட பாலர் கல்வியை வழங்குகிறது.
பல்வகை ஷிப்ட்களின் துவக்கம் குறித்து பேசிய, லைட்ஹவுஸ் லேர்னிங், ப்ரீ-கே பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.எஸ்.சேஷசாய், “புதிய கல்வியாண்டிற்கான சேர்க்கை ஆரம்பத்துடன், எங்களது 1200க்கும் மேற்பட்ட பாலர் பள்ளிகள் முழுவதும் பல ஷிப்டுகளை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். “கல்வியை புதுப்பிப்பது ” என்பது எப்போதுமே நாங்கள் செய்யும் அனைத்திற்கும் மையமாக இருந்து வருகிறது, மேலும் கல்வியை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் அணுகக் கூடியதாகவும் நெகிழ்வானதாகவும் மாற்றும் முன் முயற்சிகளை கையாள்வதே எங்கள் முயற்சியாக இருக்கிறது. “குழந்தை முதன்மை” கருத்தியல் மூலம், யூரோகிட்ஸ் -இல் நாங்கள், குழந்தையின் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் முழுமையான வளர்ச்சியை செயல்படுத்துகிற தரமான கல்வியை அனைவருக்கும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். ஒழுங்கற்ற ஷிப்டுகளில் பணிபுரியும் பெற்றோரின் வசதியையும் குழந்தைகளின் தினசரி நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பெற்றோர்கள் இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளதங்களுக்கு அருகிலுள்ள யூரோகிட்ஸ் மையத்திற்கு செல்லலாம்.” என்று கூறினார்.
யூரோகிட்ஸ் எப்போதும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை உடல் ரீதியாக பாலர் கற்றலுடன் ஈடுபடுத்துவதில் முன்னணியில் உள்ளது. இந்த முயற்சிக்கு இணங்க, யூரோகிட்ஸ் ஒரு Home Buddy பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது. மல்டிமீடியா வீடியோக்கள், ஒர்க்ஷீட்கள் மற்றும் விளையாடு,பார், மற்றும் செய் ஆகிய அம்சங்களின் மூலம் கற்றல் விளைவுகளை அதிகரிக்க, மூலோபாய திரை நேரத்துடன் தினசரி ஊடாடல்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுடன், வீட்டிலேயே வகுப்பறைக் கற்றலுக்கு இந்தப் பயன்பாடு துணை செய்கிறது. இந்த ஆண்டு,யூரோகிட்ஸ், 2022-23 ஆம் ஆண்டில் குழந்தைகளின் கற்றல் இழப்பை ஈடுகட்டவும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கு தடையற்ற மாற்றத்தை எளிதாக்கவும் இரண்டு வாரங்கள் தீர்வு காலம், 12 வாரங்கள் சிறப்பு பாடத்திட்டம் மற்றும் 36 வாரங்கள் வழக்கமான பள்ளிக் கல்வியுடன் 15 மாத ஒருங்கிணைப்பு திட்டத்தையும் வழங்குகிறது.
யூரோகிட்ஸ் ப்ரீ ஸ்கூல் பற்றி: யூரோகிட்ஸ், 21 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி பிராண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் 350 க்கும் அதிகமான நகரங்கள் மற்றும் 3 நாடுகளில் இருப்பைக்கொண்டுள்ளது. இந்த பயணம் 2001 இல் இரண்டு பாலர் பள்ளிகளுடன் தொடங்கியது. அப்போதிருந்து, இந்த குழுமம், குழந்தைகள், வீடு போன்ற சூழலில் முழுமையாக வளர உதவுகின்ற அதன் புதுமையான மற்றும் மனதைக்கவரும் பாடத்திட்டமான EUNOIA மூலம் பாலர் கல்விக்கான தரத்தை தொடர்ந்து உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் “ரைட் ஸ்டார்ட், ஃப்ளையிங் ஸ்டார்ட்” வழங்குவது அவர்களுக்கு சிறந்த எதிர்கால வெற்றியை அளிக்கும் என்பது அடிப்படை நம்பிக்கை. மேலும், யூரோகிட்ஸ் ஃபிரான்சீஸ் மாதிரியானது கல்வித் துறையில் புதிய தொழில் முனைவோர் செழிக்க உதவுவதோடு அவர்களின் பாலர் பள்ளிகளை அமைக்க உதவுகிறது.
குழுமம் –
யூரோகிட்ஸ் என்பது லைட்ஹவுஸ் லேர்னிங்-இன் ஒரு பகுதியாக இந்தியாவின் முன்னணி ஆரம்ப குழந்தைப் பருவம் மற்றும் கே-12 கல்விக் குழுமங்களில் ஒன்றாக இருக்கிறது. 1,200க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் மற்றும் 45 பள்ளிகளின் வலையமைப்பை சீரமைக்கும் மாணவர்களை மையமாகக் கொண்ட இலக்குகளுடன் எதிர்கால சந்ததியினருக்கு வலுவான அடித்தளம் மற்றும் அதிநவீன திறன்களை உருவாக்க இந்த குழுமம் உறுதி பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும், லைட்ஹவுஸ் லெர்னிங் குழுமம் 150,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கற்றலின் மகிழ்ச்சியை வழங்குகிறது, 1000 க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோரை ஆதரிக்கிறது மற்றும் அதன் அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் 10,000 க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட திறமையான பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது.