தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் முதல் மூலக்கடை செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் முருகேசன் மற்றும் சாலைப்பணியாளர்கள் உதயம் அப்துல் கபூர் மரம் நடும் பணியில் ஈடுபட்டனர். இவரது செயல் அப்பகுதி மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.