தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரிக்கடவு ஊராட்சியில் மரம் நடு விழா நடைபெற்றது.

திண்டுக்கல்-

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி  ஒன்றியம், கோரிக்கடவு   ஊராட்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர்,  இ.பெரியசாமி BA.,BGL., மற்றும்    உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி BA., அறிவுறுத்தலின் பேரில், கோரிக்கடவு  ஊராட்சியில், 500  க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு , தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர்  நா.சுப்பிரமணியன் மரம் நடும் பணியை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ்,  தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்  இரா.சத்தியபுவனா இராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சு.கிருஷ்ணசாமி , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெ.கதிர்வேல்,  கோரிக்கடவு  ஊராட்சி மன்ற தலைவர் இராமதுரை மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »