மயிலாடுதுறை, தரங்கம்பாடியைச் சேர்ந்த ஜெகதீசன், வ/27 என்பவர், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, சென்னை, தி.நகர், துக்காராம் தெருவிலுள்ள ஆண்கள் தங்கம் விடுதியில் தங்கிவருகிறார். ஜெகதீசன், அவரது இரு சக்கர வாகனத்தை மேற்படி விடுதியில் நிறுத்தி விட்டு ஊருக்கு சென்று 07.01.2023 அன்று திரும்ப வந்து பார்த்த போது, அவரது இரு சக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றிருந்தனர். இது குறித்து ஜெகதீசன், R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-1 மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற பிரபு, வ/32, த/பெ.மன்னார், A பிளாக், சுப்பு பிள்ளை தோட்டம், கண்ணம்மா பேட்டை, தி.நகர் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் எதிரி பிரபு புகார்தாரரின் இரு சக்கர வாகனம் உட்பட மாம்பலம், குமரன் நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது.
அதன் பேரில், எதிரியிடமிருந்து 4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் எதிரி பிரபு மீது ஏற்கனவே R-3 அசோக் நகர் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி பிரபு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.