டாடா AIA லைஃப் ஃபார்ச்சூன் கேரண்ட்டி பென்ஷன், ஒரு சக்திவாய்ந்த புதுப்பித்தலைப் பெறுகிறது

ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிச் சுதந்திரத்தைப் பெறுவது இப்போது இலகுவானது, மேம்படுத்தப்பட்ட வருடாந்திர விகிதங்களுக்கு நன்றி

•    துரதிர்ஷ்டவசமாக, வருடாந்தரத்தை  பெறுபவர் இறந்தால், சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு கணிசமாக அதிக இறப்பு நன்மையை வழங்குதல்

மும்பை,  செப்டம்பர் 2022 : இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் (டாடா ஏஐஏ லைஃப்), அதன் முதன்மையான வருடாந்திர (வாழ்க்கைக்கான உத்தரவாத வருமானம்) திட்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த பதிப்பான டாடா ஏஐஏ லைஃப் பார்ச்சூன் கேரண்ட்டி பென்ஷன் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பதிப்பு ஆனது, நுகர்வோர் தங்களுடைய பொற்காலங்களில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் கவலையின்றியும் வாழ்வதற்கு,  அவசியம் வைத்திருப்பதற்கு உண்டாக்கப்பட்ட ஒன்றாக, அதிக வருடாந்திர விகிதங்கள் மற்றும் இறப்பு பலன்கள் உட்பட சில முக்கியமான மேம்பாடுகளை உள்ளடக்கியது ஆகும்.

நீண்ட ஆயுட்கால எதிர்பார்ப்பு மற்றும் குறைக்கப்பட்ட சேமிப்பு அளவுகள் ஆகியவை, ஓய்வூதிய வருமானத்தை நாட்டில் ஒரு முக்கிய கவலையாக ஆக்கியுள்ளன. இந்தியாவில் ஓய்வூதிய சேமிப்பு இடைவெளி 2050க்குள் 85 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது* மேலும் இந்திய நுகர்வோர் ஓய்வுக்குப் பிறகு நிதி சுதந்திரத்தை உறுதி செய்வதன் மூலம் இந்த நெருக்கடிக்கு தயாராக வேண்டும். டாடா ஏஐஏ லைஃப் ஃபார்ச்சூன் உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் பல தேவைக்கேற்ப  உருவாக்கப்பட்ட உத்தரவாதமான வருமான விருப்பங்களை வழங்குகிறது மேலும்  வாடிக்கையாளர்களுக்கு ஓய்வுபெற்ற வாழ்க்கைக்கு போதுமான அளவு சேமிக்க உதவுகிறது. இந்தத் திட்டம், அவர்களின் தற்போதைய வாழ்க்கை முறையை

எதிர்காலத்தில் தக்கவைத்துக்கொள்ள சேமிப்பதைக் கருத்தில் கொள்ள விரும்பும் திருமணமானவர்கள், பெண்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட  பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கான பாதுகாப்பு வலையை உறுதி செய்ய தேவைப்படும்  சிறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, இது மிகவும் பொருத்தமான விருப்பமாகும்.

முக்கிய தயாரிப்பு நன்மைகள் கீழ்கண்டவைகளில் அடங்கும் –

உடனடி ஆயுட்கால வருடாந்திரம்:பார்ச்சூன்  கேரண்ட்டி  பென்ஷன் ஆனது, வருடாந்திர பெறுபவரின்  வாழும் காலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட கால இடைவெளிகளின்படி,  உடனடி வருடாந்திர கொடுப்பனவுகளை வழங்குகிறது. இது உடனடி வாழ்நாள் வருடாந்திரத்தை, வாங்கும் விலையின் வருவாயுடன் வழங்குகிறது. வாங்கும் போது செலுத்தப்பட்ட தொகையானது,  இறப்பு நன்மையாக திருப்பிச் செலுத்தப்படும்.
உத்தரவாதமான சேர்த்தல்களின் விருப்பம்:ஒத்திவைப்பு காலத்தின் போது ஒவ்வொரு பாலிசி மாதத்தின் முடிவிலும் உத்தரவாதமான சேர்த்தல்கள் சேர்க்கப்படுகிறது.
வருடாந்திரத்தை முன்கூட்டியே தேர்ந்தெடுக்கும் விருப்பம்:இந்த விருப்பம், வருடாந்தர வருடாந்திர கொடுப்பனவை முன்கூட்டியே பெற உங்களை அனுமதிக்கிறது
பாலிசிக்கு ஈடாக  கடனைப் பெறுதல் :பாலிசி தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, பாலிசியின் மீது நீங்கள் கடனைப் பெறலாம். ஜாயின்ட் லைஃப் விருப்பத்தின் கீழ், நீங்கள் ஒரு கடனைப் பெறலாம், உங்களுக்கு மரணம் ஏற்பட்டால் இரண்டாம் நிலை வருடாந்திரம் பெறுபவர் அதை பெறலாம்.
ஜாயின்ட் லைஃப் விருப்பங்கள்:முதன்மை வருடாந்திரம் பெறுபவர் வருடாந்திர கொடுப்பனவுகளைப் பெற தகுதியுள்ள நபராக இருக்கும்பொழுது, முதன்மை வருடாந்திரதாரர் இறந்தால், இரண்டாம் நிலை வருடாந்திரதாரர்கள்,(மனைவி/குழந்தை/பெற்றோர்/மாமனார் மாமியார் அல்லது உடன்பிறந்தவர்கள்) பொருந்தக்கூடிய வகையில் , வருடாந்திர கொடுப்பனவுகளைப் பெற உரிமை உள்ளவர்கள் ஆவார்கள்.

நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் தலைமை நிதி அதிகாரி சமித் உபாத்யாய், “ஓய்வு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது போன்றது ஆகும். நிர்வகிக்கும்  பொறுப்புகளைப் பற்றி கவலைப்படுவதை விட மகிழ்ச்சியாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எனவே, நாம் அனைவரும், ஓய்வுக்குப் பிறகு நிதி சுதந்திரத்தை விரும்புகிறோம், எனவே நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை பணம் முடிவெடுக்காது. ஓய்வூதியத்திற்குப் பிறகு நமது  செலவினங்களை நிர்வகிக்க உதவும், வாழ்க்கைக்கான, நிலையான, உத்தரவாதமான வருமானத்துடன், டாடா ஏஐஏ லைஃப் பார்ச்சூன் கேரண்ட்டி பென்ஷன், அந்த இலக்கை அடைய ஒரு சிறந்த நிதிக் கருவியாகும். இந்தத் திட்டம் எங்கள் நுகர்வோர்கள்  ஓய்வு பெறுவதற்கு முன் போதுமான அளவு சேமிக்க உதவுகிறது. மேலும்  வழக்கமான சம்பள வருமானம் நிறுத்தப்படும்போது நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது.” என்று கூறினார்.

தகுந்த மற்றும் பாதுகாப்பான ஓய்வூதிய வருமானம் பெற விரும்பும் நுகர்வோருக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தீர்வாகும், மேலும் உத்திரவாதமான ஆயுள் காப்பீட்டுத் தீர்வில் ஏதேனும் உபரி நிதியை முதலீடு செய்வதன் மூலம் தங்கள் ஓய்வூதிய தொகுப்பை  அதிகரிக்க விரும்பும் ஓய்வுபெற்ற நுகர்வோர்,  பார்ச்சூன் உத்தரவாத ஓய்வூதியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, டெஃபெர்ட்  லைஃப்  அன்னுட்டி  (GA-I) மற்றும் வாங்கிய விலையை திருப்பிதருதலுடன்,  45 வயதான ஒரு ஆண் வருடாந்திரதாரர்,  பிரீமியமாக ரூ.5 இலட்சத்தை ஏழு ஆண்டுகளுக்கு செலுத்துவாரானால், அவர், 8  ஆம் ஆண்டு முதல்,அவர் உயிருடன் இருக்கும் வரை, ஆண்டுக்கு வருடாந்திர வருமானமாக  ரூ.261,030 பெறத்தொடங்குவார். இவ்வாறு, அவர் செலுத்திய மொத்த பிரீமியத்தில் 7.46% ஆண்டு வருமானத்தை உறுதி செய்கிறார். வருடாந்திரதாரர் இறக்க நேரிட்டால் , நியமிக்கப்பட்டவரும், மரணப் பலனைப் பெற உரிமை உள்ளவராக ஆகிறார்.

இந்த தயாரிப்பு டெஃபெர்ட்  லைஃப்  அன்னுட்டி  (ஜி ஏ – II) மற்றும் வாங்கிய விலையை திருப்பிதருதலுடன்  சமமான கவர்ச்சிகரமான முன்மொழிவை வழங்குகிறது. 50 வயதான ஒரு தனிநபர்,     பத்து ஆண்டுகளுக்கு  இன்னும்  பணியில் இருக்கும்பொழுதே, ரூ.5 இலட்சம் ஆண்டு பிரீமியமாக முதலீடு செய்யும்பொழுது, அவர்கள் ஓய்வு பெறும் வயதை எட்டும்போது வருடாந்திர  வருமானமாக  ஆண்டுக்கு ரூ.4,06,100  ஐ பெற தொடங்குவார்கள்.  மீண்டும், முந்தைய நிகழ்வைப் போலவே, வருடாந்திரதாரர் இறந்தவுடன், செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் அவரது நியமானதாரருக்கு திருப்பித் தரப்படும். ஜாயின்ட் லைஃப் ஆப்ஷனில், 48 வயது கணவனும் 45 வயது மனைவியும் ரூ.2 இலட்சத்தை 12 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் போது உத்தரவாதமான ஆண்டு வருடாந்திரத் தொகையாக ரூ. 2,12,040 ஐ வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள். அவர்கள் இறந்தவுடன், அவர்களின் நியமனதாரர் ரூ. 24 இலட்சத்தை பெறுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »