ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன், வ/51, த/பெ.சதாசிவம் என்பவர் ஶ்ரீபதி அசோசியேட் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். மேற்படி நிறுவனம் சைதாப்பேட்டை, தாடண்டநகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமானம் நடைபெறும் இடத்தில், கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை வைத்து காவலாளியை நியமித்து பாதுகாத்து வந்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை 2.00 மணியளவில் மேற்படி கட்டுமானம் நடைபெறும் இடத்திற்குள் புகுந்த நபர், அங்கிருந்த பித்தளை தாழ்பாள்களை திருட முயன்றபோது, அங்கிருந்த ஊழியர்கள் சத்தம் போட, திருட முயன்ற நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்நிலையில் மேற்படி நபர் மீண்டும் காலை 8.00 மணியளவில் மேற்படி இடத்திற்கு வந்தபோது அங்கு பணியிலிருந்து ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் மேற்படி நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
தகவலறிந்தJ-1 சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரிடம் விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து மேற்படி நிறுவனத்தின் மேலாளர் சங்கர சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. J-1 சைதாப்பேட்டை காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணையில் பிடிபட்ட நபர் அருண்குமார், வ/19, த/பெ.ரமேஷ், எண்.21, ஜோதியம்மாள்நகர், 2வது தெரு, சைதாப்பேட்டை, சென்னை என்பது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட அருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.