கோவை புலியகுளம்அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு……

 கோவை – புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு 30.09.2021 நாளை வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது. இதுபற்றி கல்லூரி முதல்வர் மாரிமுத்து அம்மாசை கூறும்போது.                                 

அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( பாரதியார் பல்கலைகழகத்தின் இணைவு பெற்றது ) புலியகுளம் கோயம்புத்தூர் மாவட்டம்  என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.  2021-22 ஆம் கல்வியாண்டிற்குரிய முதலாமாண்டு மாணவிகள் சேர்க்கை இணைய வழி மற்றும் நோடியாக விண்ணப்பித்தவர்களுக்கும், கடந்த 26.092021 முதல் தொடங்கி 28.092021 வரை பல கட்டங்களாக நடைபெற்றது. இச்சேரிக்கைகளில் கல்லூரியில் உள்ள மொத்தம் 301 இடங்களில் பெரும்பாலான இடங்களில் மாணவிகள் சேர்ந்துள்ளனர் . ஏற்கனவே கல்லூரிகளில் சேர்ந்த மாணவிகளுக்கு இடமாறுதல் வாய்ப்பு , கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது . மீதமுள்ள இடங்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு வரும் 30.09.2021 காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது . இதில் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவிகள் மட்டுமின்றி , இதுநாள் வரை விண்ணப்பிக்காத மாணவிகளும் நேரடியாக பங்கேற்கலாம் . இவ்வாய்ப்பினை அனைத்து மாணவிகளும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். என  முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »