மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் எழுமலை அருகே உத்தபுரம் மேலதெருவில் கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தி மூன் கிரிக்கெட் கிளப் சார்பாக இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டியை சேடபட்டி ஊராட்சி மன்ற பெருந்தலைவர் சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் துவக்கிவைத்தார்.
உடன் உத்தப்புரம் ஒன்றிய கவுன் சிலர் ராணி செல்லன் மாவட்ட விவசாய அணி சின்னபாண்டி ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி கிளை செயலாளர் ராமமூர்த்தி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயமணி உத்தபுரம் 5வது வார்டு மெம்பர் முருகன், பாண்டி, விஷ்ணு, ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்போட்டியுல் 16 அணியினர் களம் இறங்கின்றனர் முதலாவதாக இன்று கீழ பட்டி அணி மற்றும் எழுமலை அணிவிளையாடியது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணியினருக்கு வெற்றி கோப்பையை முருகன் கிரில் ஒர்க்ஸ் உத்தபுரம் நாகராஜ் சார்பாக வழங்கபட்டது.
மேலும் இப்போட்டிக்கான முதல்பரிசு ௹ 7000ம், இரண்டாம் பரிசு ௹ 5000ம் மூன்றாம் பரிசு௹ 3000ம் வழங்கபட்டது. இதில் உத்தப்புரம், எழுமலை சேடபட்டி உள்ளிட்ட சுற்றுப்புறங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.