GCPL, இந்தியாவின் முதல் ரெடி டு மிக்ஸ் பாடிவாஷ், கோத்ரெஜ் மேஜிக் பாடிவாஷை வெளியிட்டது; பிராண்ட் தூதராக ஷாருக்கானை நியமித்தது.
ஒரு பாக்கெட்டுக்கு வெறும் ரூ.45 என்ற அடிமட்ட விலையான ஒரு சோப்பின் விலையில் வருகிறது..
மும்பை, ஜூலை, 2022: ‘கிரகத்தை இலாபத்திற்கு முன்பாக வைப்பது ’ என்ற அதன் மதிப்புக்கு ஏற்ப, கோத்ரெஜ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (ஜிசிபிஎல்), கோத்ரேஜ் மேஜிக் பாடிவாஷை வெளியிட்டது, இது வெறும் ரூ. 45 விலையில்,இந்தியாவின் முதல் ரெடி-டு-மிக்ஸ் பாடி வாஷ் ஆகும் . இந்த கண்டுபிடிப்பு, மறுபயன்பாடு மற்றும் விரயமாக்குதலை குறைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது, இதன் மூலம், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு நிலையான தேர்வு செய்ய அதிகாரம் அளிக்கிறது.
நடிகர் ஷா ருக் கான் கோத்ரேஜ் மேஜிக் பாடிவாஷின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் வெகுஜன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இடம்பெறுவார். கோத்ரேஜ் மேஜிக் பாடிவாஷ், அதன் ரெடி-டு-மிக்ஸ் வடிவத்துடன், சுற்றுச்சூழல் நலன் மற்றும் நுகர்வோர் சவால்களுக்கு ஒரு தீர்வாகும்.
இந்தியா ஆண்டுக்கு 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது. தோல் மற்றும் உடல் பராமரிப்பு பொருட்களில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது; இதன் விளைவாக, உற்பத்திக்கு முன் டன் கணக்கில் தண்ணீர் அனுப்பப்படுகிறது மற்றும் முடிக்கப்பட்ட தயாரிப்பு கொண்டு செல்லப்படும் போது கனமானதாக ஆக்குகிறது. கோத்ரெஜ் மேஜிக் பாடிவாஷுக்கு, பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக்கில் 16% தேவைப்படுகிறது மற்றும் வழக்கமான பாடிவாஷுடன் ஒப்பிடும்போது உற்பத்தி செய்ய 19% ஆற்றல் மட்டுமே தேவைப்படுகிறது, மேலும் ஒரு சோப்புப் பட்டையைத் தயாரிக்கத் தேவைப்படும் மொத்த ஆற்றலில் 10% மட்டுமே தேவைப்படுகிறது. ஜெல் அடிப்படையிலான சாச்செட்டுகள் என்பதால் சிறிய மற்றும் இலகுவான, ஒவ்வொரு டிரக்கிலும் அதிக பாக்கெட்டுகளை எடுத்துச் செல்ல முடியும், இது 44% குறைவான டீசல் நுகர்வுக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக வழக்கமான பாடிவாஷ் கொண்டு செல்வதை விட 44% குறைவான கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது.
நுகர்வோர் பார்வையில், அவர்கள் சோப்பிலிருந்து பாடிவாஷுக்கு மேம்படுத்த விரும்புகிறார்கள், ஆனால் அதிகப்படியான விலைகள் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. கோத்ரெஜ் மேஜிக் பாடிவாஷ் ஒற்றை ஜெல் சாச்செட்டிலும், பாட்டில் மற்றும் ஜெல் சாச்செட்டைக் கொண்ட காம்பி பேக்கிலும் கிடைக்கிறது. சாச்செட்டின் விலை INR 45, காம்பி பேக் (பாட்டில் + ஜெல் சாச்செட்) INR 65. இந்த தயாரிப்பு சோப்பைப் போலவே மலிவு விலையில் உள்ளது. இந்த தயாரிப்பு லாவெண்டர் மற்றும் ஹனி ஜாஸ்மின் ஆகிய இரண்டு வகைகளில் வருகிறது .
இந்த அறிமுகம் குறித்து, கோத்ரேஜ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (ஜிசிபிஎல்) நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சுதிர் சீதாபதி கருத்துத் தெரிவிக்கையில், “நிலைத்தன்மை என்பது எங்கள் மூலோபாயத்தின் முக்கிய அம்சமாகும். அவ்வாறு செய்வதன் மூலம், அணுகக்கூடிய விலை புள்ளிகளில், அற்புதமான தரமான தயாரிப்புகளை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட எங்களின் மேஜிக் பவுடர்-டு-லிக்யுட் ஹேண்ட்வாஷ், பிளாஸ்டிக், தண்ணீர் பயன்பாடு மற்றும் போக்குவரத்துச் செலவுகளை எவ்வாறு குறைத்துள்ளோம் என்பதற்கு சிறந்த உதாரணம் ஆகும். புதிய கோத்ரெஜ் மேஜிக் பாடிவாஷ் வெறும் 45 ரூபாய் விலையில் , நுகர்வோருக்கு, சோப்பைப் போலவே நியாயமான பாடிவாஷையும் வழங்குகிறோம். இவை அனைத்தும் மலிவான விலை மற்றும் தாய் பூமிக்கு இணக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது. கோத்ரேஜ் மேஜிக் பாடிவாஷ் முகமாக, ஷா ருக் கானை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பிளாஸ்டிக், கார்பன் தடம் மற்றும் சோப்பு பயன்படுத்துபவர்களின் குளியல் அனுபவத்தை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்த தயாரிப்புக்காக ஒரு பிரபலத்தை நாங்கள் இணைத்துள்ளோம் “ என்று கூறினார்.
அவர் மேலும் கூறினார், “கோத்ரேஜ் மேஜிக் மற்றும் பிற முன்னோடி சுற்றுச்சூழல் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் இருந்து பசுமை தள்ளுபடியுடன் வெளிவருகின்றன, பசுமை பிரீமியத்துடன் அல்ல எதிர்காலம் என்று நான் நம்புகிறேன். சமூக முன்முயற்சிகளுடன், சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வு வாழ்க்கையின் செய்தியை அங்கீகரிக்கும் வெகுஜன விழிப்புணர்வு முயற்சிகளுக்கு, அடுத்த 3 ஆண்டுகளில் INR 100 கோடி செலவிடப்படும் என்று உறுதியளிக்கிறோம்.”
பாடிவாஷின் பிராண்ட் தூதராக அவர் நியமிக்கப்பட்டது குறித்து நடிகர் ஷாருக்கான் கூறுகையில், “சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கை முறையை ஆதரிப்பதற்காக புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான தயாரிப்பு இது ஆகும், மேலும் கிட்டத்தட்ட இது ஒரு மாஜிக் ! இது பிளாஸ்டிக், விரயம் மற்றும் ஆற்றல் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்க உதவும் ஒரு எளிய மற்றும் பயனுள்ள யோசனையாகும. நான் இதை ஆதரிப்பதில் பெருமைப்படுகிறேன் மற்றும் நிலைத்தன்மை என்பது ஒரு வாழ்க்கைத் தேர்வாகும், எவரும் அதை மிகச் சிறிய வழிகளில் பின்பற்றலாம்” என்றார்.
கோத்ரெஜ் மேஜிக் பாடிவாஷ், லாவெண்டர் மற்றும் ஹனி ஜாஸ்மின் இன் மகிழ்வான நறுமணங்களால் நிரம்பியுள்ளது, நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சருமத்தையும் உடலையும் புதுப்பிக்கிறது. பாட்டிலில் தண்ணீர் சேர்த்து, அதில் ஜெல் ஊற்றி, 1-2 நிமிடம் வேகமாக குலுக்கவும். ஒரு ஜெல் பாக்கெட்டில் இருந்து 200 மில்லி கோத்ரெஜ் மேஜிக் பாடிவாஷ் தயாரிக்க முடியும்.
GCPL இன் குடும்பத்திலிருந்து, கோத்ரெஜ் மேஜிக், ஒரு ரெடி-டு-மிக்ஸ் பிராண்ட் ஆகும். 2018 ஆம் ஆண்டில், ‘மேஜிக்’ போர்ட்ஃபோலியோவின் கீழ், கோத்ரெஜ் மேஜிக் ஹேண்ட்வாஷ் என்ற இந்தியாவின் முதல் பவுடர்-டு-லிக்விட் ஹேண்ட்வாஷ் தொடங்கப்பட்டது. வரம்பை விரிவுபடுத்துவதில், கோத்ரெஜ் மேஜிக் பாடிவாஷ், மேஜிக் வரம்பில் இரண்டாவது கூடுதலாகும். ரெடி-டு-மிக்ஸ் வகையை உருவாக்குவதுடன், இந்த வெளியீடு GCPL இன் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது மற்றும் கிரகத்திற்கு ஏற்ற தயாரிப்புகளைத் தேர்வுசெய்ய நுகர்வோரை ஊக்குவிக்கிறது.