வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் காலியிடம் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயத்தை விட்டு புதிய பிளாட்டுகள் உருவாகி வருகின்றன. மக்கள் தொகை அதிகமானதாலும் கிராமங்களில் இருந்து அருகில் உள்ள பெரும் ஊராட்சிக்கு மக்கள் குடியேறுவது இந்த விலை உயர்வுக்கான காரணம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது தற்போது வனத்துறையினர் ஒரு சில குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள மக்களை வெளியேற சொல்வதாலும் மலை கிராமங்களில் பேருந்து மருத்துவமனை குறிப்பாக சிக்னல் டவர் கல்வி வசதி போன்ற அடிப்படை வசதிகளை தேர்வு செய்தும் விவசாயத்திற்கு போதுமான வருவாய் இல்லாததால் இழப்பு ஏற்படுவதாலும் தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் படையெடுத்து வருவதால் போட்டி போட்டுக்கொண்டு இடங்களை விலைக்கு கேட்பதால் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர். எதிர்வரும் 10 வருடங்களில் இப்பகுதியில் 80% விவசாயம் பாதிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். விவசாய நிலங்கள் யாவும் மரங்களுக்கு பதிலாக கட்டிடங்களை முளைத்திருக்கும் என்று வேதனையுடன் கூறுகின்றனர்.