மூலக்கடை ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை மீண்டும் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை

வருஷநாடு –

மூலக்கடை ஊராட்சியை மையப்படுத்தி கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள முத்தாலம்பாறை சிறப்பாறை வண்ணாத்தி பாறை, தாழையூத்து, தொப்பையாபுரம், அருகவெளி, ஆலந்தளிர் கருப்பையா புரம், ஆகிய சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இந்த மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித காரணமுமின்றி கால்நடை மருத்துவமனை மூடப்பட்டதால் அப்பகுதியில் ஆடு மாடு, கோழி, பூனை, நாய் என அனைத்தையும் கடமலைக்குண்டு ஊராட்சியில் செயல்படும் கால்நடை மருத்துவமனைக்கு தனியார் வாடகை வாகனம் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் அவல நிலை உள்ளது. தற்போது மழை காலங்களில் மர்ம நோய் தாக்குவதால் ஆடு மற்றும் கோழிகள் பறவைகள் இழந்து வருகின்றன. இதற்கான காரணம் இதுவரை தெளிவுபடுத்தவில்லை தற்போது செயலற்ற நிலையில் காணப்படும் கால்நடை மருத்துவமனையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து பந்தல் செட் அமைத்திருப்பது வேதனை அளிக்கக்கூடிய விஷயம். எனவே இப்பகுதி பொதுமக்கள் ஆடு மாடு மேய்ப்பவர்கள் நலனை கருத்தில்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் கால்நடை மருத்துவமனை செயல்பட ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இப்பகுதி கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »