வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருசநாடு ஊராட்சியை மையப்படுத்தி வருஷநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை எவ்வித காரணமும் இன்றி நிறுத்தப்பட்டது. இந்த செய்தியை ஹலோ மிரர் மெட்ராஸ் நாளிதழில் செய்தியாக இடம் பெற்றது இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அலுவலர் வருஷநாடு பகுதி செய்தியாளர் செந்தில் குமாரையும் மக்கள் நண்பன் கிருஷ்ண மூர்த்தியையும் தொடர்பு கொண்டு பேசியபோது வருஷநாடு பகுதிக்கு வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை வருஷநாடு பகுதியில் நிறுத்த மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாகவும், ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கும் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஓய்வெடுக்க கழிப்பறையுடன் கூடிய தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அவ்வாறு ஏற்படுத்திக் கொடுத்தால் வாகனங்கள் அங்கேயே இந்த நிலை நிறுத்தப்பட்டு அப்பகுதி மக்கள் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் சேவையை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாகவும் சேவை மனப்பான்மையுடன் இப்பணியைச் செய்ய காத்திருப்பதாகவும் கூறுகின்றனர் எனவே வருஷநாடு ஊராட்சி நிர்வாகம் மேற்கண்ட கோரிக்கையை ஏற்று தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் வருஷநாடு ஊராட்சிகளில் பயன்பாட்டில் இல்லாத இ சேவை மையம் நூலகம் ஆவின் குளிரூட்டும் நிலையம் அனைத்தும் மக்கள் பயன்பாடின்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இடம் ஒதுக்கீடு செய்யும் வரை வருஷநாடு ஊராட்சி நிர்வாகம் தனியாரிடம் குறைந்த வாடகையில் வீடு ஏற்படுத்திக் கொடுத்தால் வருஷநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் பயன்பெறுவார்கள் இதன் சாதனை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகத்திற்கு சாரும் எனவும் கூறுகின்றனர்.