கன்னியாகுமரி – 75 வது ஆண்டு சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மாணவர்களுக்கான சுதந்திர தொடர் ஓட்டம் நடைப்பெற்றது.இதில் குமரி மாவட்ட ஆட்சியர்.அரவிந்த் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார், அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்.அரவிந்த் மாணவர்களுடன் ஐந்து கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று ஓடினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர்.அரவிந்த் இன்று நடைப்பெற்ற இந்த மினி மராத்தான் சுதந்திரத்தை நினைவூட்டும் வகையிலும் அரசாங்கம் சார்பில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.அதேபோல் குமரி மாவட்டத்தில் இன்று இந்த தொடர் ஓட்டம் நடைபெற்றது, இதில் உடல் ஆரோக்கியம்,கட்டுக்கோப்பு மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்,இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர். டேவிட் டேனியல்,தேசிய தடகள வீரர்.ஆறுமுகம் பிள்ளை மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.