வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வருசநாடு கடமலைக்குண்டு முறுக்கு கோடை வாய்க்கால் பாறை ஆகிய 6 இடங்களில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் இப்பகுதி கால்நடை வளர்ப்போருக்கு போதுமான வருமானம் கிடைத்ததாலும் அவர்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த குளிரூட்டும் நிலையம் எவ்வித காரணமும் இன்றி நிறுத்தப்பட்டது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். கட்டிடம் தனிநபரின் ஒப்புதல் பெற்று அன்றைய அரசு கட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கட்டிடத்துக்குள் இருந்த கணினி குளிரூட்டும் டேங்கர் அளவு நிர்ணயம் செய்யும் கருவி மற்றும் அனைத்து தளவாட சாமான்கள் எடுக்கப்பட்டு வெறும் கட்டடமாக பயன்பாடற்ற நிலையில் காட்சி அளித்து வருகிறது. மீண்டும் கடமலை மயிலை ஒன்றியத்தில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா என்று இப்பகுதி பொதுமக்களும் பால் உற்பத்தியாளர்களும் கேட்டுக் கொள்கின்றனர்.