பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வைகை பறையர் பூங்காவின் ஆபத்தான நிலை!

வருஷநாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேனி மாவட்டத்திலேயே சுற்றுலா தளங்களில்  புகழ்பெற்றது. இந்த வைகை அணை பூங்கா இந்த பூங்காவை 1960ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் கல்வி தந்தை காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதில் எம்ஜிஆர் நடித்த மாட்டுக்கார வேலன்  திரை படமும் இந்த பூங்காவில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த பராமரிப்பும் பொதுப்பணித்துறையின் கைவசம் உள்ளது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டணம் செலுத்தி வைகை அணையை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர் இங்கே சிறுவர்களுக்கான விளையாட்டு திடலும் உள்ளது. சிறுவர்கள் சுற்றி மகிழ்ந்திட ரயில் ஏற்றம் இறக்கம், கலங்கரை விளக்கம், ஊஞ்சல், தேனி மாவட்டத்திற்கு உண்டான வரைபடம், யானை சறுக்கல் உள்ளது. யானை சறுக்கல் எவ்வித பராமரிப்பும் இன்றி இரண்டு அடி அளவில் பள்ளம் உள்ளது. சறுக்கி விளையாடும் குழந்தைகள் கை கால் மற்றும் தலையில் காயம் ஏற்படவும், இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுலாப்பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.எனவே பொதுப்பணித்துறையினர் யானை சறுக்கலை பராமரிப்பு செய்ய வேண்டு மெனவும், அவ்வப்போது வைகை அணை பூங்கா ஊழியர்கள் அனுமதியின்றி மது கொண்டு வந்து புதர்களில் மது அருந்தி விட்டு பாட்டிலை அங்கேயே விட்டுச் செல்வதால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். எனவே இதுபோன்ற நபர்களை கவனிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »