தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை கெளரவிக்கும் விதமாக மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு மரியாதை நிமிர்த்தமாக பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் பரிமாறியும் ஆசிரியர் தின நிகழ்ச்சியை பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடினார்.. டாக்டர்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளே தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இராதகிருஷ்ணன் அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்தவர் ஆவார் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை நினைவு கூரும் நாளே ஆசிரியர் தினம்….