பெரியகுளம் தென்கரை கச்சேரி ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையும், கால்நடை மருத்துவமனையும் இடையில் நகராட்சியால் கட்டப்பட்டுள்ள கழிப்பிடம் உள்ளது. ஆறு மாதங்களாக பயனற்ற நிலையில் உள்ளது .மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது .கழிப்பிடம் அருகில் புல்பூண்டு நிறைந்து காணப்படுகிறது எனவே அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும் கால்நடை மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும் சிறுநீர் கழிக்கவோ கழிப்பிடம் செல்லவோ மிகவும் சிரமப்படுகின்றனர் .அரசு மருத்துவமனை எதிரில் குறைந்த பட்சம் 12 தேநீர் கடைகளும் உள்ளன. அங்கு பணிசெய்யும் மக்கள் கண்ணீர் விடுகின்றனர் பத்திர அலுவலகம் அங்கு உள்ளது ஒருநாளைக்கு 200 க்கு மேற்பட்டோர் ஆண்கள், பெண்கள் வருகின்றனர் ஆகையால் பொதுமக்கள் இவ்விடம் சுத்தம் செய்து மீண்டும் நன்கு முறையில் தூய்மை படுத்தி பொதுமக்களுக்கு பயன்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்