கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற வலிமையான இந்தியா ஓட்டத்தில் சேலம் யூனிட் 2 தமிழ்நாடு சிக்னல் கம்பெனி தேசிய மாணவர் படை சார்பில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஓட்டத்தின் மூலம் பொதுமக்கள் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை தினமும் செய்து தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேரலாதன் தலைமை தாங்கினார் JCI காவேரிப்பட்டினம் சங்கத்தின் தலைவர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பள்ளியின் உதவி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி பத்மாவதி ரமேஷ் பாபு முன்னிலை வகித்தனர் வலிமையான இந்தியா ஓட்டத்தினை காவல் துணை கண்காணிப்பாளர் திரு சரவணன் மற்றும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு கபிலன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். வலிமையான இந்திய ஓட்டம் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி காந்தி ரோடு, பழையபேட்டை டிபி ரோடு, வழியாக புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை, வரை சென்று பெங்களூர் ரோடு வழியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் முடிவுற்றது .ஓட்டப்பந்தய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்த வலிமையான இந்தியா தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் *பெருமாள் மணிமேகலை கல்லூரி ஓசூர், சோனா கல்லூரி விநாயகா மிஷன்ஸ் கல்லூரி சேலம், ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி சேலம், பத்மாவதி மகளிர் கல்லூரி சேலம்*, . மற்றும் ராணுவ பயிற்சி *அதிகாரிகள் _ திரு சியாராம் யாதவ் JCO’ பாஸ்கரன் JCO, ரங்கன் அவில்தார், வினோத் பாய், திவாரி மற்றும் இவர்களுடன் *NCC* *OFFICERS* லெப்டினன்ட் S. சண்முகம் ,ஃபர்ஸ்ட் ஆபீஸர் சகாதேவன் “ஃபர்ஸ்ட் ஆபீஸர் கோபு “கேர் டேக்கர் தீபா* இவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், நாகரசம்பட்டி ‘பாரூர் ‘பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை ஆசிரியர்கள் சகாதேவன்,கோபு,கதிரேசன், ராஜசேகர்,மற்றும் தேசிய காவேரிப்பட்டினம் சங்கத்தின் செயலாளர் பொருளாளர் “வடிவேல் “மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.