சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, D-5 மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதியம் திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம் சந்திப்பு அருகே காவல் குழுவினர் கண்காணித்த போது, அங்கு ஒருவர் ரகசியமாக கஞ்சா பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் மேற்படி இடத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஷெரிப் (எ) முஸ்தபா ஷெரிப், வ/19, த/பெ.அசுரபுதீன், எண்.45, எஸ்.எம்நகர், பல்லவன் சாலை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ஷெரிப் (எ) முஸ்தபா ஷெரிப் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.