கே.கே.நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது. 16 செல்போன்கள் மற்றும் 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப் பட்டது.

சென்னை, அசோக்நகர், 82வது தெரு, எண்.16/32, என்ற முகவரியில் வசித்து வரும் பிரசாந்த், வ/22, த/பெ. சடகோபால் என்பவர் இரவு 9.45 மணியளவில் கே.கே.நகர், ராஜமன்னார் சாலை, P.T.ராஜன் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மேற்படி பிரசாந்திடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். இது குறித்து பிரசாந்த் R-7 கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது

R-7 கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் வழக்கில் சம்பந்தப்பட்ட 1.கிருபாகரன், வ/21, த/பெ.ராஜாராம், எண்.1/175, ஜெயச்சந்திரன் நகர், வடகரை, செங்குன்றம், சென்னை 2. மாவுவிக்கி (எ) விக்னேஷ், வ/19, த/பெ. ராஜா, எண்.1/1916, கட்டபொம்மன் 22வது தெரு, காந்திநகர், செங்குன்றம் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் மேற்படி குற்றவாளிகள் அளித்த தகவலின் பேரில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 3.நாகூர்மீரான், வ/36, த/பெ.முகமது ஆரிப், எண்.10/23, 2வது தெரு, நேதாஜி நகர், தண்டையார் பேட்டை, சென்னை ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட கிருபாகரன்,  மாவுவிக்கி (எ) விக்னேஷ் ஆகிய இருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் கே.கே.நகர், மாம்பலம், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் தலா 3 செல்போன் பறிப்பு சம்பவங்கள், வடபழனி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் என மொத்தம் 13 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும், மற்றொரு குற்றவாளியான நாகூர்மீரான் மேற்படி நபர்களிடமிருந்து திருட்டு செல்போன்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 16 செல்போன்கள்,1 கத்தி மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகவுள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மேற்படி மூவர் மீதும் விசாரணைக்குப் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »