இந்தியாவின் G20 பிரசிடென்சியின் கீழ் விவசாய பணிக்குழுவின் முதல் கூட்டம் பிப்ரவரி 13 அன்று தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளில், இந்தூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜ்வாடா அரண்மனையில் பிரதிநிதிகளுக்காக பாரம்பரிய நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தினை கண்காட்சியை தொடங்கி வைத்தார். தினைகள் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொடர்பான ஸ்டால்கள் கண்காட்சியின் போது முக்கிய ஈர்ப்புகளாக இருந்தன. ஜி20 அமைப்பின் 19 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தவிர, 10 சிறப்பு அழைப்பாளர்களும், 10 சர்வதேச அமைப்புகளின் 100 பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.