சென்னை, அண்ணாநகர், 16-வது மெயின் ரோடு, கதிரவன் காலனியில் வசிக்கும் ராம்குமார், வ/38, த/பெ.ஏழுமலை என்பவர் கடந்த 29.01.2023 அன்று இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று மறுநாள் (30.01.2023) காலை பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதேபோல, அத்தெருவில் வசிக்கும் ஜெகநாதன், வ/36, த/பெ. ஆறுமுகம் என்பவருடைய வீட்டின் பூட்டும் இரவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 2 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ராம்குமார் மற்றும் ஜெகநாதன் கொடுத்த புகார்களின் மீது V-5 திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
V-5 திருமங்கலம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு மேற்படி 2 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட 1.மகபூப் பாஷா (எ) பப்லு, வ/24, 1வது பிளாக், எழில்நகர், பெரும்பாக்கம், 2.விக்கி (எ) விக்னேஷ், வ/22. த/பெ. விஜயகுமார், அம்மன் நகர் மெயின் ரோடு, காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, 3.முத்துகுமார் (எ) ஓட்டைமுத்து, வ/23, த/பெ.நாகராஜ், ஸ்டாலின்நகர் 6வது தெரு, காட்டுப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 சவரன் தங்கநகைகள் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்களை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.