வடபழனி பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி கைது.

சென்னை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 9-வது குறுக்குத் தெரு பகுதியில் வசித்து வரும் நசீமா, பெ/வ-39, க/பெ.ஷேக்கமருல் என்பவர் கோடம்பாக்கம், பாரதீஸ்வரன் காலனி முதல் குறுக்குத் தெரு பகுதியில் சூப்பர் மார்க்கெட் கடை வைத்து நடத்தி வருகிறார். இரவு மேற்படி சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த ஒரு நபர், மேற்படி நசீமா என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, கையால் தாக்கி, பணம் ரூ.3,000/- ஐ பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். இது குறித்து நசீமா, R-8 வடபழனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

R-8 வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஐயப்பன்,வ/33, த/பெ.மணி, பூம்புகார் நகர், கொளத்தூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட ஐயப்பன் என்பவர் R-2 கோடம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 1 கொலை, 2 கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஐயப்பன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »