மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் ஆறு வழிபாட்டுத் தலங்களில் நடைபெற்ற திருவிழாக்களில் பொதுமக்கள் மனு கொடுத்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல் நிலையத்திற்கு மனு கொடுக்கப்பட்டது. இரணியல் காவல் நிலையத்தில் குற்றவாளிக்கு சாதகமாக விசாரணை முடிக்கப்பட்டுள்ளது இதை உடனே வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கருங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும் எதிரியை இன்னும் கைது செய்யவில்லை என்றும், மனு கொடுக்கப்பட்டது மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வீடுகட்டி கொடுப்பதற்கும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு நாளும் இல்லத்தரசிகளின் தேவையாக பயன்படும் கேஸ் விலை ஏற்றத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் போராட்டம் நடந்தது. போராட்டம் முடிந்தவுடன் மாவட்ட ஆட்சியாளரிடம் பொறுப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மனு கொடுத்தனர்