கடமலை மயிலை ஒன்றியத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு விவசாயம் மற்றும் தொழில்கள் பாதிப்படைகிறது இதனை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் பலதரப்பட்ட போராட்டங்களை சந்தித்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது வருஷநாடு பகுதியில் மின் பவர் ஹவுஸ் அமைத்தால் மின்சாரம் தடையின்றி கிடைக்கும் எனவும், வருஷநாடு குமணன் தொழு அருக வெளி ஆகிய 3 பகுதிகளுக்கும் பிரித்தும் சுமார் 100 டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து மும்முனை மின்சாரம் அடிப்படையில் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். இதற்கு இப்பகுதி விவசாயிகள் மற்றும் வருஷநாடு ஊராட்சி நிர்வாகம் இணைந்து இடம் கொடுத்தால் பவர்ஹவுஸ் அமைக்க மின்வாரியம் தயாராக உள்ளதாக தெரியவருகிறது இதனால் வருஷநாடு முறுக்கோடை தும்மக்குண்டு சிங்கராஜபுரம் ஆகிய ஊராட்சிகளில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இதில் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் போதிய மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டுமெனில் வருஷநாடு பகுதியில் பவர் ஹவுஸ் அமைத்தால் மட்டுமே சீராக வழங்கப்படும் என்று கூறுகின்றனர். எனவே வருஷநாடு பகுதி வாழ் விவசாயிகள் மின் வாரியத்திற்கு தேவையான இடத்தை தேர்வு செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர் மேலும் தற்பொழுது வருச நாட்டில் பயன்படாமல் இருக்கின்ற இ சேவை மையம் கட்டிடத்தை வருஷநாடு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மின்வாரிய அலுவலகம் பில் தொகை வசூலிக்க அலுவலகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயம் ஆகும்.