சென்னை, கொண்டித் தோப்பு, பட்டாபிராம் தெரு, எண். ஜெய்சங்கர், வ/54, த/பெ. மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாலை சுமார் 5.00 மணியளவில் தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு ஆட்டோவிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த வழியாக தெருவில் நடந்து செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்து ஆபாச சைககள் காண்பித்து அவதூறாக பேசியுள்ளார். இது குறித்து ஜெய்சங்கர் C-3 ஏழுகிணறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
C-3 ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயக்குமார், வ/50, த/பெ. காத்தவராய், 5வது குறுக்குதெரு, பாரதிநகர், கொருக்குப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.