சென்னை, புளியந்தோப்பு, வாசுகி நகர், 2வது குறுக்கு தெரு, எண்.55 என்ற முகவரியில் காமேஷ், வ/24, த/பெ.பிரான்சன் என்பவர் வசித்து வருகிறார். காமேஷ் இரவு சுமார் 10.00 மணியளவில் வீட்டிலிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி மேற்படி காமேஷ் வீட்டின் அருகில் வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இச்சம்பவம் குறித்து காமேஷ்,P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
P-1 புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யா, வ/23, த/பெ.ராஜி, எண்.24, சுடுகாடு தெரு, அழிஞ்சிவாக்கம், கோட்டூர், செங்குன்றம், சென்னை என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சூர்யா மீது க ஞ்சா வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகி உள்ள மணி (எ) குள்ளமணி என்பவரை தனிப்படை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் போலீசாரின் விசாரணையில் மணி (எ) குள்ளமணியின் நண்பர் செல்வம் (எ) கருக்கா செல்வம், மேற்படி காமேஷின் வீட்டின் அருகில் வசித்து வருகிறார். மணி (எ) குள்ளமணி தனது நண்பர் செல்வம் (எ) கருக்கா செல்வத்தை குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக அழைத்த போது வரததால், ஆத்திரமடைந்த மணி (எ) குள்ளமணி தனது நண்பர் சூர்யா என்பவருடன் சேர்ந்து செல்வம் (எ) கருக்கா செல்வத்தை மிரட்டுவதற்காக அவரது வீட்டின் அருகில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசி சென்றதும், அது காமேஷின் வீட்டின் முன்பு விழுந்துள்ளது தெரிய வந்தது.
மேலும் இந்த சம்பவத்திற்கு முன்பு இதே போன்று மணி (எ) குள்ளமணி மற்றும் அவரது நண்பர் சூர்யா ஆகிய இருவரும் சேர்ந்து இரவு P-4 பேசின் பாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியந்தோப்பு, சாந்திநகர் பகுதியில் வசித்து வந்த நண்பர் விமல் (எ) சிங்கம் விமல் என்பவரும் குற்றச் செயலில் ஈடுபட வரமறுத்ததால் அவரை மிரட்டுவதற்காக அவரது வீட்டின் முன்பும் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசி சென்றதும் தெரிய வந்தது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.