சென்னை, மந்தைவெளி, எண்.20/80 என்ற முகவரியில் வசித்து வரும் சரோஜா, வ/72, த/பெ. முத்துசாமி என்பவர் கடந்த 12.07.2022 அன்று மந்தைவெளி, தேவநாதன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மேற்படி சரோஜா கழுத்தில் அணிந்திருந்த 3½ சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து சரோஜாவின் மருமகன் நாராயணன் E-4 அபிராமபுரம் காவல் நிலைத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
E-4 அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஜார்ஜ், வ/32, த/பெ. ஆரோக்யநாதன், எண்.4 பல்லக்குமாநகர், மயிலாப்பூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 ½ சவரன் தங்கச்செயின் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் எதிரி ஜார்ஜ் அபிராமபுரம் பகுதியில் 1 பெண்ணிடம் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஜார்ஜ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.