மதுரவாயல் மற்றும் தலைமைச் செயலக காலனி பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது. 2.4 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் வானகரம் சர்வீஸ் சாலையில் கண்காணித்தபோது, அங்கு 2 நபர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அதன் பேரில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.வசந்த், வ/22, த/பெ.விஜயகுமார், எண்.16, பாரதிதெரு, மாந்தோப்பு, திருவண்ணாமலை மாவட்டம் 2.நதிம், வ/22, த/பெ.காதர்பாஷா, புதுதெரு, திருவண்ணாமலை மாவட்டம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.2 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 1 இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி வசந்த் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது.

இதேபோல,G-5 தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் மூலிகை பூங்கா அருகே கண்காணித்து அங்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த குமார், வ/45,த/பெ.அண்ணாமலை, எண்.107, திடீர்நகர், பிரிக்ளின்ரோடு, புரசைவாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »