சென்னை, புனிததோமைர் மலைபகுதியில் உள்ள வெப்ஸ் நினைவு ஆதரவற்றோர் இல்லத்தில் வார்டனாக கலைவாணி, வ/35,என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை மேற்படி ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த 3 சிறுவர்கள், காணாமல் போய் விட்டதாக மேற்படி ஆதவற்றோர் இல்லத்தில் வார்டனாக பணிபுரியும் கலைவாணி S-1 புனிததோமையர் மலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் Boy Missing வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
மேலும் இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும், அருகிலுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல்ஆணையரகங்களுக்கும், அருகில் உள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் வான் தந்திகருவி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
S-1 புனிததோமையர் மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். இந்நிலையில் காணாமல் போன 3 சிறுவர்களில் ஒருவர் தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காணாமல் போன சிறுவர்கள் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, பேரந்தூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதும், உறவினர் வீட்டின் முகவரி சரியாக தெரியததால், சிறுவர்களில் ஒருவர் அங்கு வழியில் வந்த ஒருவரிடம் செல்போனை வாங்கி தனது தாயை தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் காணாமல் போன 3 சிறுவர்களையும் கண்டு பிடித்து தங்களது பாதுகாப்பில் வைத்து சென்னை பெருநகரகாவல், S-1 புனிததோமையர் மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தனிப்படை போலீசார் திருவள்ளூர் மாவட்டத்திற்கு விரைந்து சென்று காணாமல் போன 3 சிறுவர்களையும் மீட்டு சென்னைக்கு கொண்டு வந்து ஆதரவற்றோர் இல்லத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர். ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து தப்பிய 3 சிறுவர்களை விரைந்து நடவடிக்கை எடுத்து 7 மணி நேரத்தில் கண்டுபிடித்த S-1 புனிததோமையர்மலை காவல் குழுவினரை சென்னை பெருநகரகாவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.