மீஷோ, 6-லட்சம் விற்பனையாளர்களின் இலக்கை எட்டியதுஅவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்த தளத்திற்கு  தனித்துவமானவர்கள்

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் இணைய வர்த்தக நிறுவனமான மீஷோ, தனது தளத்தில், ஏப்ரல் 2021 முதல் 7 மடங்கு அதிகரிப்பைப் பதிவு செய்து, 6 லட்சம் விற்பனையாளர் பதிவுகளைத் தாண்டியுள்ளதாக அறிவித்தது.  கடந்த ஆண்டில்,  ஜீரோ கமிஷன் மற்றும் ஜீரோ பெனால்டி போன்ற நிறுவனத்தின் தொழில்-முதல் முயற்சிகளின் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான சிறு வணிகங்கள், மீஷோவில் இணைந்துள்ளன.

இந்த விற்பனையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீஷோவில் மட்டுமே செயல்படுகின்றனர், இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான  இ-காமர்ஸ் தள தேர்வாக இது உள்ளது. மீஷோ விற்பனையாளர்களில் கிட்டத்தட்ட 70% பேர் அமிர்தசரஸ், ராஜ்கோட் மற்றும் சூரத் போன்ற அடுக்கு 2+ நகரங்களைச் சேர்ந்தவர்கள். ஜனவரி 2021 முதல், 1 லட்சம் சிறு வணிக உரிமையாளர்களை, இலட்சாதிபதிகளாகவும் , 5,000 க்கும் மேற்பட்டவர்களை, கோடீஸ்வரர்களாகவும் மாற்றுவதில், நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. விற்பனையாளர்கள் ஒரு பெரிய மற்றும் மாறுபட்ட வாடிக்கையாளர் தளத்தைத் தட்டியெழுப்ப அனுமதிப்பது, அவர்களின், சம்பாதிக்கும் ஆற்றல் திறனை  உயர்த்தியுள்ளது.

இந்த வளர்ச்சி குறித்து, மீஷோவில் உள்ள சப்ளை குரோத், CXO லக்ஷ்மிநாராயண் சுவாமிநாதன், “எம்எஸ்எம்இ களுக்கு அதிக வளர்ச்சி மற்றும் லாப வரம்புகளை வழங்கும் தளத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

மீஷோவில், விற்பனையாளர்கள், ஏப்ரல் 2021 முதல், தங்களின் வருவாயை மூன்று மடங்காகப் பெற்றுள்ளனர். சிறு வணிகங்கள், தங்களின் முழுத் திறனை அடைய உதவுவதில், மீஷோ ஆற்றிவரும் பங்கைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இணைய வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்துகிறோம் என்று கூறும்போது, விற்பனயாளர்கள்  அனைவருக்கும் ஒரே மாதிரியான வெற்றி வாய்ப்பு உள்ள சூழ்நிலையை உருவாக்குகிறோம் என்று அர்த்தம். இன்று, மீஷோ மட்டுமே விற்பனையாளர்களை, அடுக்குகளின் அடிப்படையில் வேறுபடுத்தாத ஒரே தளம், அல்லது எங்களிடம் தனிப்பட்ட லேபிள் ஆட்டம்  அல்லது மொத்த விற்பனை ஆட்டம்  இல்லை. எங்கள் விற்பனையாளர்-நட்பு முயற்சிகள் மூலம், 100 மில்லியன் சிறு வணிகங்களை ஆன்லைனில் வெற்றிபெறச் செய்வதற்கான எங்கள் பார்வையை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்று கூறினார் .

மீஷோ வலுவான தரவு ஆதரவு மாடல்களை உருவாக்கியுள்ளது, அவை பயனர் நட்பு அனுபவத்தை உருவாக்க உதவியது, விற்பனையாளர்களை  அடிக்கடி சிரமப்படுத்தும்   ஒரு தொடர்ச்சியான  சிக்கலைத்  தீர்க்கிறது மேலும் மின்வணிக சுற்றுச்சூழல் அமைப்பில், அதிக அளவிலான வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துகிறது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான சிறு வணிகங்கள் இன்னும் தொழில்நுட்ப அறிவு மற்றும் மொபைலுக்கு முதலிடம் பெறவில்லை. வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்காக, ஒருங்கிணைக்கப்பட்ட இ-காமர்ஸ் மொபைல் செயலியை அறிமுகப்படுத்திய முதல் இந்திய நிறுவனம், மீஷோ ஆகும், இது நாட்டில் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த செயலி மூலம், விற்பனையாளர்கள் தங்கள் வணிகங்களை, ஆர்டர் செயலாக்கம், பணம் செலுத்துதல் கண்காணிப்பு அல்லது சரக்கு மேலாண்மை என  எதுவாயிருந்தாலும் , சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »