சென்னை, பிராட்வே, நாராயணப்பாரோடு, எண்.158 என்ற முகவரியில் வசித்து வந்த சௌந்தராஜன், வ/59, த/பெ.மாணிக்கம் என்பவர் காலை பிராட்வே வடக்கு பேருந்து நிலைய வளாகம், மெட்ரோ நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் மேற்படி சௌந்தராஜனை கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வசந்த் (எ) வசந்தகுமார், வ/20, த/பெ.சண்முகம், வடக்கு பேருந்து நிலையம் பிளாட்பாரம், பிராட்வே, சென்னை என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றசம்பவத்திற்கு பயன்படுத்திய 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 1.கணேசன், த/பெ.சிவலிங்கம், அவரது மகன் 2. தினேஷ்குமார், த/பெ.கணேசன், 3.இன்பம், த/பெ. அண்ணாமலை,4. கார்த்திக், த/பெ. கணபதி, 5. குமரேசன், த/பெ. ஆனந்தம் ஆகிய 5 நபர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மேலும், B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி கொலை வழக்கில் தொடர்புடைய சதிஷ்குமார், வ/30, த/பெ.கணேசன், I பிளாக், நேருநகர், வியாசர்பாடி, சென்னை என்பவரை இரவு கைது செய்தனர். அவரிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி சதிஷ்குமார் என்பவர் வழக்கறிஞர் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட வசந்தகுமார் மற்றும் சதிஷ்குமார் ஆகியோர் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.