கொளத்தூர் பகுதியில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி தங்க நகைகள் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்ற வழக்கில்  கணவன் மனைவி உட்பட 3  நபர்கள் கைது. 1 சவரன் தங்க நகைகள், 2 செல்போன்கள், 1 இருசக்கர 2 கத்திகள் பறிமுதல்.

சென்னை, கொளத்தூர், GKM காலனி, 37வது தெருவில் வசிக்கும் பாபாஜி, வ/27, த/பெ.ரகு என்பவர் கடந்த 03.03.2022 அன்று காலை சுமார் 11.50 மணியளவில் வீட்டிலிருந்தபோது, 2 நபர்கள் பாபாஜியின் வீட்டிற்குள் நுழைந்து, பாபாஜியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பாபாஜியை தாக்கி, பீரோவில் வைத்திருந்த 4 சவரன் எடை கொண்ட தங்க சங்கிலிகள், தங்க மோதிரங்கள் மற்றும் 2 செல்போன்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பாபாஜி கொடுத்த புகாரின்பேரில், V-6 கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

V-6 கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தும், சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1.கார்த்திக் (எ) கருக்கா கார்த்திக், வ/23, த/பெ.அப்துல் ரஹீம், காமராஜர் சாலை 4வது தெரு, காந்திநகர், கொடுங்கையூர், சென்னை, 2.பாலாஜி, வ/23, த/பெ.ராஜசேகர், வ/23, த/பெ.ராஜசேகர், செல்லியம்மன் கோயில் தெரு, கொளத்தூர் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரர் வீட்டில் திருடிய 1 சவரன் தங்க நகைகள், 2 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் எதிரி பாலாஜியின் மனைவி திவ்யா என்பவர் கொடுத்த தகவலின்பேரில், மேற்படி குற்ற சம்பவம் நிகழ்ந்தேறியது தெரியவந்தது. அதன்பேரில், திவ்யா, வ/19, க/பெ.பாலாஜி, எண்.7, செல்லியம்மன் கோயில் தெரு, கொளத்தூர், சென்னை என்பவரையும் கைது செய்தனர்.  மேலும் விசாரணையில், எதிரிகள் கார்த்திக் (எ) கருக்கா கார்த்திக் மீது 1 கொலை வழக்கு, 1 கஞ்சா வழக்கு என 2 குற்ற வழக்குகளும், பாலாஜி மீது  2 திருட்டு வழக்குகள் உட்பட 3 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »