மெகா மார்ச் சலுகையுடன் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடும் கல்யாண ஜூவல்லர்ஸ்! 

2022, மார்ச் 5 – 22 வரை 50% தள்ளுபடியில் நகைகள் வாங்கலாம்!

இந்தியாவின் மிக நம்பகமான, முன்னணி ஜூவல்லரி பிராண்ட்களில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ், நாடு முழுவதுமுள்ள தனது வாடிக்கையாளர்களுக்காக சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு மெகா மார்ச் சலுகையை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து நேர்த்தியான, பல்வேறு வகையான கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைகளுக்கு சேதாரத்தில் 50% தள்ளுபடியை* []flat 50% off on wastages*] வழங்குகிறது.

இந்த விழாக்காலத்தை கொண்டாடும் வகையில், கல்யாண் ஜூவல்லர்ஸில் அனைத்து நகைகளையும் வாங்கும் வாடிக்கையாளர்கள் மெகா மார்ச் சலுகை மூலமாக உடனடி சேமிப்பைப் பதிவு செய்ய முடியும். இதற்கு முன்னும் இதற்கு பின்னும் இப்படியொன்று இல்லை எனும்படியான இந்த ஆச்சர்யமான சலுகை கல்யாண் ஜூவல்லர்ஸின் அனைத்து கிளைகளுக்கும், தங்கம் முதல் வைரம் வரை மற்றும் பட்டை தீட்டப்படாதது முதல் மதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். முன்னர் தனது ஷோரூம்களில் தங்க விகிதத்தை தரநிலைக்கு உட்படுத்திய கல்யாண் ஜூவல்லர்ஸ், இந்த தனித்துவமான பிரச்சாரத்தின் மூலமாகத் தனது மேலான வாடிக்கையாளர்கள் அதிகபட்ச பலன்களுடன் நகைகள் வாங்குவதற்கான கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது. இந்தியா முழுவதுமுள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரும்களிலும் 2022, மார்ச் 20 வரை இந்த சலுகை செல்லுபடியாகும்.

இந்த விற்பனை குறித்து கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் திரு.ரமேஷ் கல்யாணராமன் (Mr. Ramesh Kalyanaraman, Executive Director, Kalyan Jewellers) பேசுகையில், “இந்தியா முழுவதுமுள்ள எங்கள் ஷோரூம்களிலும் அனைத்து நகைகளின் சேதாரத்திலும் 50% தள்ளுபடிக்கு* உத்தரவாதம் தரும் எங்களது பெண்கள் தின சிறப்பு ‘மெகா மார்ச் சலுகை’யை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். விரைவில் திருமண சீசன் வரவுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகைகளின் மதிப்பில் அதிகளவு சலுகைகளைப் பெறுவார்கள் என்று நம்புகிறோம்”என்று தெரிவித்தார்.

கல்யாண் ஜூவல்லர்ஸில் வாங்கும் நகைகள் பிஐஎஸ் ஹால்மார்க் (BIS hallmarked) தரம் பெற்றவை, தூய்மைக்கான சோதனைகள் பலவற்றை எதிர்கொண்டவை. தூய்மை, இலவச ஆயுட்கால நகை பராமரிப்பு, நகைகளின் விரிவான தகவல்கள், வெளிப்படையான பரிமாற்றம் ஆகியவற்றுக்கு உறுதியளிக்கும் கல்யாண் ஜூவல்லர்ஸ் 4-நிலை உத்தரவாதச் சான்றிதழையும் (Kalyan Jewellers 4-Level Assurance Certificate) ஃபை-பேக் பாலிசிகளையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். தங்கள் பிராண்ட் மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு மிகச்சிறந்ததை வழங்கும் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியே இந்த சான்றிதழ் ஆகும்.

மிகவும் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தும் வகையில், தனது பணியாளர்கள், வாடிக்கையாளர்களை விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்படுத்துகிறது கல்யாண் ஜூவல்லர்ஸ். இங்கு பின்பற்றப்படும் ‘வீ கேர்’ கோவிட்-19 வழிகாட்டுதல்களின் ஒருபகுதியாக, தனது ஷோரூம்கள் அனைத்திலும் உயர்நிலை பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி வருகிறது. பாதுகாப்பு நெறிமுறை வழிகாட்டுதல்கள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, ஒரு ‘பாதுகாப்பு அளவீட்டு அலுவலரை’யும் (Safety Measure Officer) நியமித்திருக்கிறது இந்நிறுவனம்.

இந்த பிராண்டின் பல்வேறு தயாரிப்புகள், சலுகைகள் பற்றி அறிய,  https://www.kalyanjewellers.net/ எனும் தளத்தை காணவும்.
*விதிமுறைகள் & நிபந்தனைகளுக்கு உட்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »