சென்னை, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 10ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை பாலா (எ) பாலசந்திரன், வ/25 என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சிறுமி அவரது வீட்டிற்கு வெளியில் இருந்த போது, எதிரிபாலா (எ) பாலசந்திரன் சிறுமியை தொட்டு, பாலியல் சீண்டல்களில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். உடனே சிறுமி சத்தம் போடவே கீழே கிடந்த கல்லை எடுத்து சிறுமியை தாக்கி, இது குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துச் சென்றார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறவே, மேற்படி சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர், T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் பேரின் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
T-13 குன்றத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், எதிரிபாலா (எ) பாலசந்திரன் என்பவர் மேற்படி 15 வயது சிறுமியை தொட்டு, பாலியல் சீண்டல்களில் ஈடுபட முயற்சி செய்துள்ளதும், சிறுமி சத்தம் போடவே அவரை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்தது.
அதன்பேரில்T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, எதிரிபாலா (எ) பாலசந்திரன், வ/25, த/பெ.சிவா, குன்றத்தூர், சென்னை என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டஎதிரிபாலா (எ) பாலசந்திரன், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.