அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியர் அவர்களது 16 வயது மகளுடன் கடந்த ஏப்ரல்/2021 மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுவரும் போது, அவர்களது உறவினர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் எதிரி மணிபாலன் (எ) ரிஷி, வ/21 என்பவர் மேற்படி 16 வயது சிறுமியிடம் Instragram மூலம் பழகியுள்ளார். தொடர்ந்து Instragram மூலம் பழகி ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை நேற்று (28.12.2021), W-8 திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
W-8 திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் எதிரி மணிபாலன் (எ) ரிஷி என்பவர் மேற்படி 16 வயது சிறுமியிடம் Instragram மூலம் பழகி, ஆசை வார்த்தைகள் கூறி, யாருக்கும் தெரியாமல் சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன் பேரில் எதிரி மணிபாலன் (எ) ரிஷி, வ/21, த/பெ.முருகன் (லேட்), எண்.2/25, அருந்ததியர் தெரு, வாழப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட மணிபாலன் (எ) ரிஷி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவுள்ளார்.