‘Lava Z3’ மொபைலுக்கு சிறப்பு EMI சலுகைகளை அறிமுகப்படுத்தும் லாவா

இந்தியவின் முன்னணி மொபைல் கைபேசி நிறுவனமான லாவா இன்டர்நேஷனல் லிமிடெட் ஆனது,  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Z3 ஸ்மார்ட்போனுக்கு சிறப்பு EMI சலுகைகளை அறிவித்துள்ளது.  இந்த சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக, லாவா பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் இணைந்து, இரண்டு அற்புதமான திட்டங்களை வழங்கியுள்ளது- அதாவது, டபுள் ஜீரோ & நோ காஸ்ட் இ.எம்.ஐ திட்டங்களாகும்.  டபுள் ஜீரோ திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பூஜ்ஜிய வட்டி மற்றும் பூஜ்ஜிய முன்பணத்தில் 4 மாத EMI சலுகையை வழங்கும் அதே வேளையில், No Cost EMI திட்டமானது வாடிக்கையாளர்கள் ஃபோனின் விலையை 5 எளிதான தவணைகளாகப் பிரிக்க உதவுகிறது.  இந்த 5 தவணைகளில், வாடிக்கையாளர் முதல் தவணையை முன்பணமாக செலுத்த வேண்டும், பின்னர் மீதமுள்ள 4 தவணைகளை பூஜ்ஜிய வட்டி விகிதத்தில் செலுத்த முடியும்.  அதாவது, வாடிக்கையாளர்கள் தங்கள் Lava Z3-ஐ பெயரளவுத் தொகையான ரூபாய் 1460 செலுத்தி வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.  ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு, Lava அனைத்து முக்கிய கார்டுகளிலும் 3 மாதங்கள் மற்றும் 6 மாதங்கள் நோ-காஸ்ட் EMI வழங்கப்படுகிறது. கூடுதலாக, லாவா வரும் நாட்களில் Z3-க்கு மேலும் அற்புதமான EMI சலுகைகளைக் கொண்டுவர இருக்கிறது.

Lava Z3 ஆனது 3GB ரேம் & 32GB ரோம் உடன் வருகிறது, இது மீடியாடெக் Helio செயலியுடன் இணைந்து தடையற்ற செயல்திறனை உறுதி செய்கிறது. அதோடு,  ஒரு பெரிய 6.5 இன்ச் HD+ IPS நாட்ச் டிஸ்ப்ளே, ஒரு உரத்த ஆடியோ ஸ்பீக்கர் மற்றும் பெரிய 5000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ள லாவா Z3 பட்ஜெட் வாங்குபவர்களுக்கு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. அதோடு, வெறும் ரூ.7299 விலையில் இருக்கும் கிடைக்கும் இந்த போன், பின்புறத்தில் அதன் டெக்ஸ்ச்சர்ட் ஃபினிஷ் மற்றும் இரண்டு ஸ்டிரைக்கிங் கலர் வேரியன்ட்கள்- கோடிட்ட சியான் & ஸ்ட்ரைப்டு ப்ளூ ஆகியவற்றுடன் காட்சிக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. Lava Z3 தற்போது ஃப்ளிப்கார்ட், அமேசான் & லாவா இ-ஸ்டோர் மற்றும் நாடு முழுவதுமுள்ள பிராண்டின் 100k+ ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

கேமரா முன்பக்கத்தில், ஸ்மார்ட்போனில் 8 எம்பி ஏஎஃப் டூயல் ஏஐ கேமரா அமைப்பு உள்ளது, எல்இடி ஃபிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி ஷூட்டர் ஸ்கிரீன் ஃபிளாஷ் உடன் குறைந்த வெளிச்சத்தில் கூட பிரமிக்க வைக்கும் காட்சிகளைப் பிடிக்கும். ஜிஃப் மோட், ஸ்மைல் கேப்சர், ஏஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் ஃபில்டர்கள் போன்ற ஸ்மார்ட்போனின் உள்ளமைக்கப்பட்ட கேமரா அம்சங்கள் பயனர்கள் தங்கள் படைப்பாற்றலை ஆராயவும், அவர்களின் ஒட்டுமொத்த புகைப்பட அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது.  மேலும், Lava Z3 ஆனது மின்னல் வேக கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது. இது பயனர்களின் டேட்டாக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகிறது.

லாவா இன்டர்நேஷனல் தயாரிப்புத் தலைவர் தேஜிந்தர் சிங் இதுகுறித்துப் பேசுகையில், “ லாவா நிறுவனமானது ஒரு பொறுப்பான இந்திய பிராண்டாக செயல்படுகிரது. மக்கள் முன்னேற்றத்தை எப்போதும் மனதில் கொண்டு இயங்குகிறது. இந்த EMI சலுகையானது, ஃபீச்சர் ஃபோன் பயனர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சலுகை பல ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு மலிவு விலையின் தடையை கடக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். ” என்று கூறினார்.

லாவா Z3 ஆனது ஆண்ட்ராய்டு 11- இல் இயங்குகிறது. தவிர, உத்தரவாதமான ஆண்ட்ராய்டு OS அப்டேட்டுடன் வருகிறது. கூடுதலாக, ஸ்மார்ட்போனில் புளூடூத் வெர்ஷன் 5.0, வைஃபை, டுவல் 4ஜி சிம் , 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் OTG சப்போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூடுதலாக, தொலைபேசி 100 நாள் இலவச திரை மாற்று சலுகையுடன் வருவது ஹைலைட்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »