சென்னை, பெரம்பூர், சீனிவாசபுரம், எ.46 என்ற முகவரியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ், வ/55, த/பெ.வேணுகோபால் என்பவர் இரவு 7.45 மணியளவில் வியாசர்பாடி ஜீவா ரயில்நிலையம், AA ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 4 நபர்கள் மேற்படி செல்வராஜிடம் 1 செல்போன் மற்றும் ரூ.600/- பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து செல்வராஜ் P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
P-3 வியாசர்பாடி காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.பரத் சஞ்சய் (எ) நாட்டாமை, வ/19, த/பெ.பலராமன், எண்.25, டி-பிளாக், ஏரிக்கரை, வியாசர்பாடி, சென்னை 2.படையப்பா, வ/23, த/பெ.பாபு, எண்.72, அன்னைசத்யாநகர், 4வது தெரு, வியாசர்பாடி, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் மேற்படி வழக்கில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து 1 செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.300/- பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பரத்சஞ்சய் (எ) நாட்டாமை மீது செம்பியம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் எதிரி பரத்சஞ்சய் (எ) நாட்டாமை மற்றும் படையப்பா ஆகிய இருவர் நீதிமன்றத்திலும் 2 இறஞ்சிறார்கள் சிறுவர் நீதிமன்றத்திலும் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.