சென்னை சோழிங்கநல்லூர், வில்லேஜ் நெடுஞ்சாலை, எண்.457, என்ற முகவரியில் வசித்து வரும் திலீப்குமார், வ/32, த/பெ.முரளிராவ் என்பவர் கடந்த 02.12.2021 அன்று தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டு திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 1 டி,வி, 1 ஹோம்தியேட்டர், 1 செல்போன் மற்றும் பணம் ரூ.10,000/- ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து திலீப்குமார் J-10 செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.பவன்சிங், வ/35, த/பெ. பட்டயாஶ்ரீ, துளசிபூர் கிராமம், பல்ராம்பூர் மாவட்டம், உத்திரப்பிரேதச மாநிலம் மற்றும் அவரது தம்பி 2.ஜெகதீஷ்சிங்,வ/30, பட்டயாஶ்ரீ, துளசிபூர்கிராமம், பல்ராம்பூர்மாவட்டம், உத்திரப்பிரதேச மாநிலம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 சவரன் தங்கநகைகள், 1 வெள்ளிக்கொடி, 2 டிவிக்கள், 1 ஹோம்தியேட்டர், மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் மேற்படி சகோதரர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்துள்ளதும், செம்மஞ்சேரி பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மேலும் 2 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கநகைகள், டிவி மற்றும் பணத்தை திருடியுள்ளதும் தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.