கினாரா கேபிட்டல் அறிமுகம் செய்யும் சிறுகுறுநடுத்தர தொழில்துறையின் பிணையில்லாத கடன்களுக்காக myKinara செல்போன் செயலி!

சென்னை – 2021 : மிக வேகமா்க வளர்ந்து வரும் நிதி தொழில் நுட்ப நிறுவனமான கினாரா கேப்பிடல் அண்மையில் மைகினாரா [myKinara]  என்ற மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்தது. மிகவும் எளிமையான 3 கட்டங்களில் மேற்கொள்ளும் எளிதான நடைமுறையும், உத்தரவாதமற்ற சிறு குறு நடுத்தர தொழில்களுக்கான முதன் முறையான கடன் வழங்கும் இடமுமாகும். மைகினாரா மொபைல் போன் செயலி தற்போது கூகுள் ஃபிளே ஸ்டோரில் கிடைக்கிறது. 24 மணி நேர கடிகார சுழற்சி காலத்துக்குள் (TAT) டிஜிட்டல் முறையில் பிணையில்லாத வணிக கடன்களுக்கு விண்ணப்பிக்கவும், பெறவும் சிறு தொழில் முனைவோர்களின் விரல் நுனிகளுக்கு ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது.

இனி வருங்காலத்தில் AI-ML  எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் அடிப்படையிலான கடன் வழங்கும் முடிவை மேற்கொள்ள கினாரா முன்னுரிமை அளி்ப்பதுடன், கள அலுவலர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் செயல்முறையை இந்தியாவில் உள்ள சிறுகுறுநடுத்தர தொழில் முனைவார்களுக்கு மைகினாரா செயலி இப்போது நேரடியாக அணுகக் கூடியதாக ஆக்குகிறது.

மைகினாரா செல்போன் செயலி ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிடைக்கிறது. பெண்களை உரிமையாளர்களாக கொண்ட சிறு குறு நடுத்தர தொழில்கள் இயல்பாகவே நிறுவனத்தின் HerVikas திட்டத்தின் கீழ் சலுகை பெற தகுதியுடையதாகிறது. இதற்காக தனிப்பட்ட விண்ணப்பம் எதையும் சமர்ப்பிக்க தேவையில்லை.

கினாரா கேப்பிடல் நிறுவனத்தின் நிறுவனரும் சிஇஓவுமான, ஹர்திகா ஷா (Hardika Shah, Founder and CEO, Kinara Capital) கூறுகையில், “ஸ்மார்’ட்போன்களின் பயன்பாடு அபரிதமான வகையில் அதிகரித்து இருப்பதன் காரணமாக, சிறு குறு நடுத்தர தொழில்கள் டிஜிட்டல் இந்தியாவில் பங்கேற்க தயாராகவும் உறுதியாகவும் உள்ளன, ஆனால் அவற்றுக்கான தீர்வுகள் குறைவாகவே உள்ளன. சிறுவணிக தொழில் முனைவோரின் சுயமாக வழிநடத்தப்படும் கடன் விண்ணப்ப பயணத்தை உருவாக்க உதவுவதன் மூலமாக, ஒட்டு மொத்த நிதி வளர்ச்சியின் பயனை அனைத்து தரப்புக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எங்களது உறுதிப்பாட்டை உள்ளூர் மொழியில் உருவாக்கப்பட்ட எங்களது மைகினாரா மொபைல் போன் செயலி மேலும் விரிவுபடுத்துகிறது. 24 மணி நேரத்தில் விரைவாக முடிவெடுப்பது, செயலாக்கம் செய்தல் மற்றும் பணம் விநியோகிப்பது ஆகிய எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் வகையில் விரைந்து செயல்படுகிறோம்” என்றார்.

சிறு வணிக தொழில் முனைவோர்கள் எந்தவொரு ஆவணத்தையும் பதிவேற்றம் செய்யாமலேயே ஒரே தடவையில் தங்களது தகுதியை ஒரு நிமிடத்துக்குள் பரிசோதித்துக் கொள்ள இயலும். செயலியில் நேரடியாக கேஒய்சி விண்ணப்பத்தை நிரப்பி வருவாயை பரிசோதிப்பதன் மூலம், ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் தொகை, வட்டி விகிதம், திருப்பி செலுத்த வேண்டிய காலம் மற்றும் தோராயமான மாதாந்திர தவணைத் தொகை ஆகிய தகவல்களுடன் கடன் குறித்து முடிவை விண்ணப்பதாரர் பெறலாம். பின்னர் இ-கையெழுத்து வசதியுடன் அவர்கள் பண விநியோகத்துக்கான செயல்முறையை தொடர இயலும்.

இந்த மைகினாரா மொபைல் செயலி மூலம், ஒரே கிளிக்கில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு தங்களின் வசதிக்கேற்றபடி சிறு வணிக தொழில் முனைவார்கள் இந்த செயல்முறையை மேற்கொள்ளும் வசதியை தேர்வு செய்யலாம். கினாராவின் பல்வேறு மொழி வசதிகளை கொண்ட வாடிக்கையாளர் கால் சென்டரை இந்த செயலி மூலம் தொடர்பு கொள்ள இயலும், அல்லது ஊழியரின் நேரடி உதவி தேவைப்பட்டால், பணியிடத்துக்கே நேரடியாக வந்து உதவக் கூடிய வாடிக்கையாளர் சேவையை கேட்டு பெறலாம். கினாராவின் பரவலாக செயல்பட்டு வரும் 110 கிளைகளின் மூலம் உள்ளூர் சிறுகுறுநடுத்தர தொழில் முனைவோர்களுக்கு தொடர்ந்து உதவி வருவதுடன், மேலும் மைகினாரா மொபைல் போன் செயலியில் கிடைக்கும் அதே டிஜிட்டல் செயல்முறையையும் பின்பற்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »