மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீபராசக்தி காளியம்மன் ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோவில்.
150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பராசக்தி காளியம்மன் கோவிலில் உருவமில்லாமல் அருவமாக சாமி பெட்டி வைத்து கிராம மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
குழந்தை வரம், நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீ பராசக்தி காளியம்மனுக்கு சிலை வைத்து வழிபட கிராம மக்கள் மற்றும் கிராம பெரியோர்களால் முடிவு செய்து கோவில் திருப்பணிகள் நடைபெற்றது. ஸ்ரீ பராசக்தி காளியம்மன் திருக்கோவில் மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் பெரிய நாட்டாமை பண்டரிநாதன் ரெட்டியார் சின்ன நாட்டமை ராமசாமி நாயுடு தலைமையில் கணபதி ஹோமத்துடன் துவங்கி சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மேதமந்திரங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரானது கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. வடக்கம்பட்டி அலங்காரபுரம், அகத்தா பட்டி பொட்டல்பட்டி கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுப்புறங்களிலிருந்து 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்திபரவசத்துடன் தரிசனம் செய்தனர். கிராம மக்கள், திருப்பணிக்குழுவினர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.