சுற்று சூழலை மேம்படுத்தும் “எகோ பைக்”மதுரையில் அறிமுகம்

மதுரை மாநகர் பெத்தானிய புரம் காளவாசல்  பகுதியில் “ரிவோல்ட்”எலக்ட்ரிக் பைக் (பசுமை இருசக்கர வாகனம்) ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.சுற்று சூழல் பாதிப்படையாத இரு சக்கர வாகனம் மதுரையில் அறிமுகம்- வேலம்மாள் குழும தலைவர் .M.V.முத்துராமலிங்கம் ஷோருமை திறந்துவைத்து குத்து விளக்கேற்றினார்.

ரிவோல்ட் மோட்டார்ஸ் முதன்மை செயல் அலுவலர் ஜெனிந்தர் ஆனந்த் மற்றும் ரிவோல்ட் மோட்டார்ஸ் முதன்மை நிர்வாக இயக்குநர்.ராமன் மல்ஹோத்ரா, ஜீவா குழும தலைவர்  ஜீவானந்தம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விற்பனையை துவக்கிவைத்தனர். ஜீவா கு ழும சுற்றுசூழல் (பசுமை) மோட்டர்ஸ் மதன் நன்றியுரை கூறினார்.

ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு 4 பேட்டரிகள் இணைக்கபட்டுள்ளது. 4 மணிநேரம் பேட்டரிசார்ஜ் செய்தால் 40 கிலோமீட்டர் வேகத்தில் 150 கிலோமீட்டர் செல்லலாம். 50 km வேகத்தில் 120 கிலோமீட்டர் செல்லலாம். இதே போல் 60 km வேகத்தில் 90 கிலோமீட்டர் செல்லலாம். மேலும் எங்கு வண்டி நின்றாலும் எளிய முறையில் பேட்டரிசார்ஜ் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

புகையில்லா, சுற்றுசூழல் பாதிப்புகள் இல்லாத வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரு சக்கர வாகனத்தில் கியர் இல்லை. எளிய வகையில் ஆண், பெண் இருபாலரும் ஒட்டும் வடிவகைப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் விற்பனை என்றாலும் தற்போது “Revolt” ரிவோல்ட் எகோ (பசுமை வாகனம்) விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »