மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு..

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணைப்பகுதியில் கடந்து சில நாட்களாக பெய்து வரும் தொடர் வடகிழக்கு பருவ மழையாலும், இப்பகுதி பாசன  விவசாயிகளின் முழு முயற்சியாலும் இந்த அணை முழுவதுமாக நிரம்பி கடந்த 5 நாட்களாக மறுகால் பாய்கிறது. இதையடுத்து தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் அணிஷ்சேகர் ஆகியோர் முன்னிலையில் இப்பகுதி பாசன வசதி பெரும் 11 கண்மாய்களுக்கு சாத்தியார் அணையிலிருந்து சுமார் 1500 ஏக்கர் நிலங்களுக்கு 25 கன அடி வீதம் இன்று காலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேலும் இந்த அணைக்கு சுமார் 340 கன அடி வீதம் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதில் செயற்பொறியாளர் சுகுமாறன், உதவி பொறியாளர் ராஜ்குமார், பாசன ஆய்வாளர் தியாகராஜன், வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், கூட்டுறவு தலைவர் முத்தையன், விவசாய அணி நடராஜன், யூனியன் ஆணையாளர் கதிரவன், செயல் அலுவலர் தேவி, ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணை தலைவர் சங்கீதா மணிமாறன்,ஒன்றிய கவுன்சிலர்கள் பவானி தனசேகரன், சுப்பாராயலு, மற்றும் இப்பகுதி பாசன விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »