மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை நிரம்பி மறுகால் செல்வதையொட்டி எம்எல்ஏ வெங்கடேசன் ஆய்வு..

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணை முழு கொள்ளளவை எட்டி கடந்த 2 நாட்களாக மறுகால் செல்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அணையை  பாரவையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், அவை தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், விவசாய அணி நடராஜன், கூட்டுறவு தலைவர் முத்தையன், சாத்தியார் அணை செயற்பொறியாளர் ராஜ்குமார், பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் தேவி மற்றும் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பாசன விவசாயிகள் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்தனர். அதில் சாத்தியார் அணையில் சுமார் 5 அடிக்குமேல் மண் படிந்து உள்ளதை தூர்வாரப்பட்டு அணை முழு கொள்ளளவை எட்ட நடவடிக்கை எடுக்கவும், அணைக்கு நீர்வரத்து பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என 11 கிராம பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் பேசிய எம்.எல்.ஏ வெங்கடேசன் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் பசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »