திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் புதுச்சத்திரம் அக்சயா அகாடமி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை….

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் – புதுச்சத்திரம் அக்சயா அகாடமி மேல்நிலைப்பள்ளி – அக்சயா நீட் பயிற்சி மையம் சார்பில் 126 மாணவ – மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இத்தேர்வில் 22 மாணவ – மாணவிகள் 600-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றனர். 41 மாணவ – மாணவிகள் 550 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றனர். 52 மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றனர். நீட் தேர்வு எழுதிய 126 மாணவ – மாணவிகளும் வெற்றிபெற்றனர். 

நீட்  தேர்வில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இனிப்புகள் வழங்கி பாராட்டினார். பள்ளி  முதல்வர் இன்னாசிமுத்து கூறியதாவது, எங்கள் பள்ளியில் பயின்ற மாணவி ஆர்.அகல்யாஸ்ரீ நீட் தேர்வில் 695 மதிப்பெண்கள் பெற்று மாநில தர வரிசையில் 4-வது இடமும், மாவட்ட தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். எப்.ராசிக் அப்துல் ரகுமான் 690 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடமும், மாணவி கே.தர்சினி 685 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3-வது இடம் பெற்றுள்ளார். மேலும் பள்ளியில் படித்த ஆர்.அகல்யாஸ்ரீ,  ராசிக் அப்துல் ரகுமான், தர்சினி ஆகியோர் அகில இந்திய அளவில் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் மருத்துவபடிப்பு பயில வாய்ப்புள்ளது.

மேலும் கிராமபுற மாணவர்களின் மருத்துவ கனவை ஒவ்வொரு ஆண்டும் அக்சயா அகாடமி மேல்நிலைப்பள்ளி நிறைவேற்றி வருகிறது.  கடந்த ஆண்டு பள்ளியில் படித்த 33 மாணவ மாணவிகள் அகில இந்திய மருத்துவ தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர் என்று கூறினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி சேர்மேன் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலர் பட்டாபி ராமன், பள்ளி பி.ஆர்.ஓ குமார் மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பாராட்டினர். மேலும் ஒட்டன்சத்திரம் திமுக நகர செயலாளர் ப.வெள்ளைச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க.பாண்டியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »