திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தினை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதற்கு எதுவாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் 30 நாட்களுக்குள் பல்வேறு இடங்களில் பெருவாரியான எண்ணிக்கையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி மேற்கொள்ள திட்டம்…

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு  மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தி, எதிர்வரும் வட கிழக்கு பருவ மழை நீரை முழு அளவில் சேகரம் செய்வது திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தினை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதற்கு எதுவாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் 30 நாட்களுக்குள் பல்வேறு இடங்களில் பெருவாரியான எண்ணிக்கையில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது

இதன்படி ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 10ம் தேதி வரை,முடிய உள்ள காலத்திற்குள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்541 ஊராட்சிகளில் 1121 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணி மேற்கொள்ள நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் தமிழக அரசின் திட்டம் உலக அளவில் பேசப்படும் வரலாற்று சாதனை நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1121 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் தொடர்பாக,Elite World Record India Records Academy, Asian Records Academy, மற்றும்Tamilan Book Or Recods, ஆகிய நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டது, இத்திட்டம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று துவக்கப்பட்டு திட்டமிட்டபடி செப்டம்பர் 10ஆம் தேதிக்கு 1121  பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டன.

இப் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியில் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பண்ணைக்குட்டைகள் 72 அடி நீளம் 30 அடி அகலம் 5 அடி ஆழம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது, இதன்படி ஒரு பண்ணை குட்டையில் 3.63  லட்சம் லிட்டர் நீர் சேகரமாகும், இவ்வறாக 1121 பண்ணைக் குட்டைகளில் 40.69 கோடி லிட்டர் மழைநீர் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சேகரம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை கணிசமான அளவில் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூபாய் 1.78 ,000/- விதம் மொத்தம் ரூபாய் 1995.38, லட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஒரு பண்ணைக்குட்டைக்கு 605 மனித சக்தி நாட்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 6.78,205 மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளுக்கு ரூ 18.51,49,965/-  தினக்கூலி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.7000 வீதம் மொத்தம் 78.40,000/- கட்டுமான செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளை மேற்குறிப்பிட்டுள்ள 4 உலக சான்று நிறுவனங்களில் தீர்ப்பாளர்கள் ஆய்வுசெய்து 30 நாட்களில் பல்வேறு இடங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதற்கான தற்காலிகச் சான்றினை செப்டம்பர் 14ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகியோரிடம் வழங்கினர். தமிழக அரசின் இச்சாதனையை 250 உலக அளவிலான செய்தி நிறுவனங்களில் மூலமாக வெளியிடுவதற்கு, Eilne Book Of Records என்ற நிறுவனம் உறுதியளித்துள்ளது. இத்திட்டம் உருவாக்க காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு Master Mind, என்று சான்று உலக சான்று நிறுவனங்களினால் விரைவில் வழங்கப்படஉள்ளது.

மேலும் இந்த மகத்தான உலக சாதனையை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ. வேலு மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி வழிகாட்டுதலின்படி ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா, முருகேஷ் துவக்கி வைத்தார்கள் மாவட்ட கூடுதல் ஆட்சியர், மு, பிரதாப் ,கண்காணிப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி வளர்ச்சி முகாமியின் உதவியோடு மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 541 பஞ்சாயத்துக்களில் அந்தந்தப் பகுதி விவசாயிகளின் வேளாண் நிலத்தில் ஒப்புதலோடு 1121 பண்ணைக்குணங்கள் உருவாக்கப்பட்டுள்ளது, 30 நாட்களில், அதாவது விவசாயிகளின் வசம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது ,இந்த பண்ணைக்குட்டை விவசாயத்திற்கு மட்டுமின்றி விவசாயிகள் விருப்பப்பட்டால் மீன் வளத்துறையின் மீன்கள் வளர்த்து அதிலும் வருமானம் கிடைக்கும் வண்ணம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

இந்திய துணைக்கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்த புதிய முயற்சியை எலைட்வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்,(USA-LCC), உலக சாதனை நிறுவனத்தின் ஏஷியா பசிஃபிக் அம்பாஸிடர் கார்த்திகேயன், ஜவஹர் மற்றும் சீனியர் அட்ஜீடிகேட்டர் அமித், ஹிங்கரோனி,  ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி(UAE), நிறுவனத்தின் இந்தியன் அம்பாஸிடர் Dr.A.K. செந்தில் குமார் மற்றும் சீனியர் அட்ஜீடிகேட்டர் B. சிவகுமாரன், இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அஸோஸியேட் எடிட்டர் ,P, ஜெகநாதன், மற்றும் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் , k.s.கார்த்திக் கனகராஜ், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சீனியர், ரெக்கார்ட்ஸ்  மேனேஜர், Dr,B,  பாலசுப்ரமணியம், நேரில் ஆய்வு செய்து 30 நாட்களில் பல்வேறு இடங்களில் அதிகமான பண்ணைக்குணங்கள் உருவாக்கிய உலக சாதனை (Most Farm Ponds Createdar Multiple in 30 days), என அங்கீகாரம் வழங்கி அதற்கான உலக சாதனை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பா,முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு ,பிரதாப், வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாதனை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மற்றும் தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும், உலக வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்த்தப்பட்ட மாபெரும் மக்கள் சேவை நிகழ்வு என்பதாலும் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த தன்னிறைவு கிடைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »