மதுரை மாவட்டம் – உசிலம்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் முத்துப்பாண்டி பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்துமிக்க சிறுதானியம் சாகுபடி குறித்த ராபி முன்பருவ பயிற்சி நடைபெற்றது மதுரை மாவட்டம் வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் அமுதன் ஆகியோரின் அறிவுரையின்படி இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி விவசாயிகளுக்கு ராபி பருவத்தில் பயிரிட ஏற்ற ரகங்கள் வளர்ச்சிக்கான காலநிலை மணல் கலந்த களிமண் நிலங்களை பயிர் சாகுபடிக்கு தேர்வு செய்வது இரண்டு முறை உழுது சமப்படுத்தி விதை படுக்கை தயார் செய்யும் முறைகள் விதை தேர்வு செய்யும் முறைகள் விதை நேர்த்தி செய்து விதைப்பது முறையான இடைவெளிகள் கடைபிடித்தல் உயிர் உரங்களை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை கடைப்பிடித்தல் நீர் மற்றும் உர நிர்வாகம் போன்ற தொழில்நுட்ப கருத்துக்களை விரிவாக கூறினார்கள் உதவி வேளாண்மை அலுவலர் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தில் தொழில் நுட்ப உதவியாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்