திண்டுக்கல் மாவட்டம், மொல்லம் பட்டி ஊராட்சியில் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது….

திண்டுக்கல் –  பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மொல்லம் பட்டி ஊராட்சியில் நடைபெற்றது.
பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி உன்னத் பாரத் அபியான்  திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள், கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர்  மேம்பாட்டு அமைப்பு,  மற்றும் வேதியியல் துறை  ஆகியவை இணைந்து  தொப்பம்பட்டி ஒன்றியம் புளியம்பட்டி மற்றும் மொல்லம்பட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டி மற்றும் மொல்லம்பட்டி கிராமங்களில்   பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, சுகாதார விழிப்புணர்வு,  சுயதொழில் பயிற்சி மற்றும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு  ஆகியவற்றை வழங்கினர்.

இம்முகாமினை கல்லூரி முதல்வர் முனைவர் ப.பிரபாகர் துவக்கி வைத்தார்.  தமிழ்த்துறை தலைவர் முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.  புளியம்பட்டி மற்றும் மொல்லம்பட்டி ஊராட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை உன்னத் பாரத் திட்ட பொறுப்பாளர் முனைவர் கோகிலா  ஏற்பாடு செய்திருந்தார். இம்முகாமில் வேதியியல் பேராசிரியர் மா.உமயவள்ளி, இயற்பியல் துறை பேராசிரியர் கி.சரண்யா,  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் க பழனிச்சாமி, முனைவர் க.கண்ணதாசன், முனைவர் சிபு, மொல்லம்பட்டி பஞ்சாயத்து துனணத்தலைவர் முருகேசன்  மற்றும் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »