மதுரை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு மற்றும் பணியின்போது உயிர் இறந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை…

மதுரை – மதுரை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு மற்றும் பணியின்போது உயிர் இறந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மனித வள வேளாண்மை துறை அமைச்சர்  பி.டி.ஆர் .பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு ஆலோசனை மையம் மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிக்கான தனியார்துறை வேலைவாய்ப்புகளை கண்டறிய வகையில் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ் சேகர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  கோ .தளபதி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அ. வெங்கடேசன் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை பொறியாளர் உமாதேவி, மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா மங்களநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »