தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவலர்கள் 25 பெயர் வாகன பேரணி…

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாடும் விதமாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நாட்டின் நான்கு திசைகளிலும் வடக்கில் ஜம்மு காஷ்மீர். தெற்கு தமிழ்நாடு. மேற்கே குஜராத். மற்றும் கிழக்கு திரிபுரா. மாநிலங்களின் காவல் துறைகளில் சார்பாக சம் மாநிலங்களிலிருந்து இருசக்கர பேரணியை ஆரம்பிக்கப்பட்டு குஜராத் நர்மதா மாவட்டத்திலுள்ள காவேடீய்ல் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் திருவுருவ சிலை சென்றடைகிறது

ஒருங்கிணைப்பது நோக்கம்

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் அருகில் உள்ள காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக 15 /10/2021 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் இருந்து துணைத் தளவாய் குமார் தலைமையில் 25 மோட்டார் சைக்கிளில் தமிழ்நாடு காவல் துறையினரும் 16 உதவியாளர்களும் அடங்கிய குழு பேரணியாக புறப்பட்டு இரண்டாயிரத்தி 85 கிலோமீட்டர் தூர பயணம் மேற்கொண்டு தானே சூரத் மற்றும் நர்மதா மாவட்டங்கள் வழியை பத்து நாட்கள் பயணித்து 24/10/2021  அன்று காவேடியாவிலுள்ள வல்லபாய் பட்டேல் சிலையினை சென்றடைகிறது.

31/10/2021 அன்று நடைபெறும் தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின்படி அபய்குமார் சிங். கூடுதல் காவல் துறை இயக்குனர் ஆயுதப்படை பிரவீன் குமார் அபினபு மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) மகேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டோ அந்தோணி ஜாக்சன் ஜெயபால் ஆகியோர் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »